பொது செய்தி

தமிழ்நாடு

விஞ்ஞான ரீதியாக திருடுவதில் தி.மு.க., வினர் வல்லவர்கள் 'மாஜி' அமைச்சர் சண்முகம் சாடல்

Added : அக் 04, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி : 'விஞ்ஞான ரீதியாக திருடுவதில் தி.மு.க., வினர் வல்லவர்கள்' என முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசினார்.விக்கிரவாண்டி தெற்கு ஒன்றியத்தில் பனையபுரம், ராதாபுரம் ஆகிய இடங்களில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்கி அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசியதாவது:அ.தி.மு.க., ஆட்சியில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் திட்டங்கள்
 விஞ்ஞான ரீதியாக திருடுவதில் தி.மு.க., வினர் வல்லவர்கள்   'மாஜி' அமைச்சர் சண்முகம் சாடல்


விக்கிரவாண்டி : 'விஞ்ஞான ரீதியாக திருடுவதில் தி.மு.க., வினர் வல்லவர்கள்' என முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசினார்.விக்கிரவாண்டி தெற்கு ஒன்றியத்தில் பனையபுரம், ராதாபுரம் ஆகிய இடங்களில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்கி அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசியதாவது:

அ.தி.மு.க., ஆட்சியில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் திட்டங்கள் அனைத்தும் தி.மு.க., ஆட்சியில் முடக்கப்பட்டுள்ளன. கஜானா காலி என பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.தி.மு.க., வினர் விஞ்ஞான ரீதியாக திருடுவதில் வல்லவர்கள் என சர்க்காரியா கமிஷனில் தெள்ளத் தெளிவாக எழுதி வைத்துள்ளனர். தற்போது, இந்து அறநிலையத் துறை கோவில்களில் உள்ள சுவாமி நகைகளை உருக்கி தங்கக் கட்டியாக்கி அதை டிபாசிட் செய்து பணம் பெறப் போகிறார்களாம்.சில ஆண்டுகள் கழித்து தங்கத்தை கரையான் அரித்து விட்டது

என கணக்கு எழுதி வைத்து விடுவார்கள். திருடுவதில் தி.மு.க.,வினர் கை தேர்ந்தவர்கள். இவர்களுக்கு சரியான பாடும் புகட்டும் வகையில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும்.இவ்வாறு முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசினார்.மயிலாடுதுறை முன்னாள் எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன், தெற்கு ஒன்றிய செயலாளர் முகுந்தன், மாநிலபொதுக்குழு லட்சுமி நாராயணன், ஒன்றிய ஜெ .,பேரவை செயலாளர் ஜோதிராஜா, சுப்ரமணி, நகர செயலாளர் பூர்ணராவ், தொழில்நுட்ப அணி ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X