சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளி கைது

Added : அக் 04, 2021
Share
Advertisement
ரிஷிவந்தியம் : கொலை வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த தொழுவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் குரு என்கிற பரமகுரு, 41; இவர், கடந்த 2010ம் ஆண்டு அரியலுார் பஸ் நிறுத்தம் அருகே நடந்த பீட்டர் கொலை வழக்கிலும், 2014ம் ஆண்டு ஓடியந்தலைச் சேர்ந்த அருளானந்தம் என்பவரது கொலை வழக்கிலும் தொடர்புடையவர். இவர்
 கொலை வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளி கைது

ரிஷிவந்தியம் : கொலை வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த தொழுவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் குரு என்கிற பரமகுரு, 41; இவர், கடந்த 2010ம் ஆண்டு அரியலுார் பஸ் நிறுத்தம் அருகே நடந்த பீட்டர் கொலை வழக்கிலும், 2014ம் ஆண்டு ஓடியந்தலைச் சேர்ந்த அருளானந்தம் என்பவரது கொலை வழக்கிலும் தொடர்புடையவர். இவர் மீது பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.மேலும், சின்னசேலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2012ம் ஆண்டு நடந்த கொலை வழக்கிலும், சங்கராபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2013ம் ஆண்டு நடந்த கொலை வழக்கிலும் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

கொலை வழக்குகளில் தொடர்புடைய பரமகுரு, நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால், பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.இதையொட்டி கள்ளக்குறிச்சி எஸ்.பி., ஜியாவுல்ஹக் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் விசாரணைநடத்தி, பெங்களூரில் தலைமறைவாக இருந்த பரமகுருவை நேற்று கைது செய்து, சங்கராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X