பொது செய்தி

தமிழ்நாடு

ஆட்டோக்களில் 2 டன் அரிசி பறக்கும் படையினர் பறிமுதல்

Added : அக் 04, 2021
Share
Advertisement
வானுார் : கிளியனுார் அருகே 2 ஆட்டோக்களில் கொண்டு செல்லப்பட்ட 2 டன் அரிசியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.கிளியனுார் திரவுபதியம்மன் கோவில் அருகே உள்ளாட்சித் தேர்தல் பறக்கும் படை தனி தாசில்தார் பாலசுப்ரமணியன் தலைமையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று மதியம் வாகன சோதனை நடத்தினர்.அப்போது, திண்டிவனத்தில் இருந்து
 ஆட்டோக்களில் 2 டன் அரிசி பறக்கும் படையினர் பறிமுதல்

வானுார் : கிளியனுார் அருகே 2 ஆட்டோக்களில் கொண்டு செல்லப்பட்ட 2 டன் அரிசியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.கிளியனுார் திரவுபதியம்மன் கோவில் அருகே உள்ளாட்சித் தேர்தல் பறக்கும் படை தனி தாசில்தார் பாலசுப்ரமணியன் தலைமையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று மதியம் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது, திண்டிவனத்தில் இருந்து அவ்வழியாக வந்த 2 ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 10 கிலோ எடை கொண்ட 257 அரிசி பைகள் இருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் ஆகும்.ஆட்டோக்களை ஓட்டி வந்த திண்டிவனம் ராஜகோபால் நகரைச் சேர்ந்த துரைராஜ், 36; அண்ணாதுரை, 37; ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அதில் திண்டிவனம் பகுதியில் இருந்து கிளியனுாரில் உள்ள அரிசி கடைக்கு ஏற்றி வருவதாக தெரிவித்தனர்.ஆனால், அதற்கான எந்த ஆவணமும் இல்லாததால், அரிசி பைகளை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள், வானுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X