சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி 'பிரஸ் ஐ.டி.,' கூவி கூவி விற்பனை! பேஸ் புக்கில் துணிச்சல்; போலீஸ் கண்காணிப்பு

Updated : அக் 04, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
கோவை : 'பேஸ்புக்' வாயிலாக, பிரஸ் அடையாள அட்டைகள் தருவதாக விளம்பரப்படுத்திய நபர்களையும், அதற்கு விருப்பம் தெரிவித்த நபர்களையும் போலீசார் கண்காணிக்கின்றனர்.கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகளிடம் பிரஸ் அடையாள அட்டைகள் இருப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். ரவுடி பினு பிறந்தநாள் விழாவில் பங்கேற்று கைது செய்யப்பட்ட, 70க்கும் மேற்பட்ட
Press, ID card, fake ID

கோவை : 'பேஸ்புக்' வாயிலாக, பிரஸ் அடையாள அட்டைகள் தருவதாக விளம்பரப்படுத்திய நபர்களையும், அதற்கு விருப்பம் தெரிவித்த நபர்களையும் போலீசார் கண்காணிக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகளிடம் பிரஸ் அடையாள அட்டைகள் இருப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். ரவுடி பினு பிறந்தநாள் விழாவில் பங்கேற்று கைது செய்யப்பட்ட, 70க்கும் மேற்பட்ட ரவுடிகளில் மூன்று பேரிடம், பிரஸ் பாஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், பேஸ்புக்கில் ஒரு தகவல் பரவி வருகிறது. இதில், பிரஸ், மீடியா அடையாள அட்டை தேவைப்படுவோர் தங்களை அணுகலாம் என்று ஒரு மொபைல்போன் எண் வழங்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்து நுாற்றுக்கும் மேற்பட்டோர் தங்களுக்கும் இதேபோன்று பிரஸ், மீடியா அடையாள அட்டைகள் வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து, மொபைல்போன் எண்களை பதிவு செய்கின்றனர். இதை பயன்படுத்தி பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது.


latest tamil news


போலீசார் கூறுகையில், 'போலியாக அடையாள அட்டை வைத்திருந்தால் அவர்கள் மீது உரிய சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பேஸ்புக்கில் விளம்பரப்படுத்தப்பட்ட தகவல் குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். போலி அடையாள அட்டைகள் வைத்துள்ள நபர்கள் குறித்து விசாரிக்க, அனைத்து போலீசாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றனர்.


கட்டப்பஞ்சாயத்து மிரட்டல்!


கோவையில் கடந்த சில ஆண்டுகளாக பத்திரிகை, 'டிவி' நிருபர்கள் என்ற பெயரில் பலர் உலா வருகின்றனர். இவர்கள் தங்களின் வாகனங்களில், 'பிரஸ் ஸ்டிக்கர்' ஒட்டிக்கொள்வது மட்டுமின்றி, போலி அடையாள அட்டைகள் வைத்து கொண்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். நிருபர் என்று கூறி பெரிய நிறுவனங்களில் பணம் கேட்டு மிரட்டியவர்கள், வீடியோ எடுத்து பணம் பறித்தவர்களை கோவை போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
04-அக்-202119:59:13 IST Report Abuse
NicoleThomson மாபியா மீடியா என்ற எனது எழுத்து நிஜம் ஆகி வருது கரெக்ட்டா புகழ் மற்றும் துருவெய்ஸ் ?
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
04-அக்-202117:37:43 IST Report Abuse
DVRR இப்பொழுது மீடியாவின் பணி என்ன?? பத்திரிகையின் பணி என்ன ??? செய்திகளை உள்ளது உள்ளபடி உரைத்தல். இப்போது என்ன செய்கின்றார்கள் ஆச்சி மசாலா, குழம்பு பொடி, மிளகாய் பொடி போட்டு காரம் நன்றாக ஏற்றி செய்தி கொடுக்கின்றார்கள். ஒருவர் இறந்தார் என்றால் அதை அப்படியே பிரசுரிக்கவும் மீடியாவே???
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
04-அக்-202114:18:51 IST Report Abuse
vpurushothaman கோவிட் கால காவல் நெருக்கடி இவை போன்றவற்றிற்கு வழி வகுக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X