சாலையை சீரமைக்கக்கோரி நாற்று நடும் போராட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாலையை சீரமைக்கக்கோரி நாற்று நடும் போராட்டம்

Added : அக் 04, 2021
Share
விழுப்புரம் : விழுப்புரத்தில் சாலையை சீரமைக்கக் கோரி குடியிருப்பு மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் கம்பன் நகர் பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் அனைத்து சாலைகளும் படுமோசமான நிலையில் உள்ளன. சில மாதங்களுக்கு முன், நகராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டு ஒப்பந்ததாரர் ஒருவர் மூலம் புதிய தார் சாலைகள்

விழுப்புரம் : விழுப்புரத்தில் சாலையை சீரமைக்கக் கோரி குடியிருப்பு மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் கம்பன் நகர் பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இப்பகுதியில் அனைத்து சாலைகளும் படுமோசமான நிலையில் உள்ளன. சில மாதங்களுக்கு முன், நகராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டு ஒப்பந்ததாரர் ஒருவர் மூலம் புதிய தார் சாலைகள் போடப்பட்டது.இதையடுத்து, அந்த சாலைகளை தோண்டி, மற்றொரு ஒப்பந்ததாரர், பாதாள சாக்கடை பணிகளை மேற்கொண்டார். தொடர்ந்து இந்த சாலை மிகவும் படுமோசமான நிலையில், மழை பெய்தால் சேறும், சகதியுமாகவும், பள்ளங்களை தண்ணீர் சூழ்வதால் பைக்கில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.இதையடுத்து, நேற்று ஒப்பந்ததாரரை கண்டித்தும், நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் அதிகாரிகளை கண்டித்தும் அப்பகுதிமக்கள் குடியிருப்பு நலச்சங்க தலைவர் கந்தன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் அப்பகுதியை சூழ்ந்துள்ள மழைநீர் நிறைந்த சேற்றில் நாற்றுகளை நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X