பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்தியவர்களும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் கலெக்டர் மோகன் வலியுறுத்தல்

Added : அக் 04, 2021
Share
Advertisement
செஞ்சி : செஞ்சியில் நடந்த தடுப்பூசி முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார். கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவீதம் இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கையாக மெகா தடுப்பூசி முகாம் மாவட்டத்தில் 1,000 இடங்களில் நேற்று நடந்தது.செஞ்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த முகாமை கலெக்டர் மோகன் ஆய்வு செய்த பின் கூறியதாவது:விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மாதம் 12 மற்றும் 19ம் தேதிகளில்
 தடுப்பூசி செலுத்தியவர்களும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்   கலெக்டர் மோகன் வலியுறுத்தல்


செஞ்சி : செஞ்சியில் நடந்த தடுப்பூசி முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார். கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவீதம் இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கையாக மெகா தடுப்பூசி முகாம் மாவட்டத்தில் 1,000 இடங்களில் நேற்று நடந்தது.

செஞ்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த முகாமை கலெக்டர் மோகன் ஆய்வு செய்த பின் கூறியதாவது:விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மாதம் 12 மற்றும் 19ம் தேதிகளில் நடந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதுவரை மாவட்டத்தில் 11 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.நான்காவது கட்டமாக இன்று (நேற்று) நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் 1,000 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடந்து வருகிறது.இதில் 70 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணியில் கிராம அலுவலர்கள், சுகாதாரத்துறையினர், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், நியாய விலை கடை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தடுப்பூசி போட்டவர்கள் அலட்சியமாக இல்லாமல் அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி தொடர்ந்து கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி தங்களை சுற்றியுள்ளவர்களை பாதுகாத்திட வேண்டும்.இவ்வாறு கலெக்டர் மோகன் கூறினார்.டி.ஆர்.ஓ., ராஜசேகரன், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர், காஞ்சனா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கிருஷ்ணப்ரியா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பொற்கொடி, செஞ்சி தாசில்தார் ராஜன், வட்டார மருத்துவ அலுவலர் மலர்விழி உட்பட பலர் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X