பறிமுதல் வாகனம் ஏலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பறிமுதல் வாகனம் ஏலம்

Added : அக் 04, 2021
Share
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்த வாகனங்களை அக்.7 ம் தேதி காலை 10:30 மணிக்கு ஏலம் விடப்பட உள்ளது.மதுவிலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அக்.7 ம் தேதி சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலம் விடப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் அக்.6 க்குள் திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் உள்ள டி.எஸ்.பி., அலுவலகத்தில் 4 சக்கர

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்த வாகனங்களை அக்.7 ம் தேதி காலை 10:30 மணிக்கு ஏலம் விடப்பட உள்ளது.

மதுவிலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அக்.7 ம் தேதி சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலம் விடப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் அக்.6 க்குள் திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் உள்ள டி.எஸ்.பி., அலுவலகத்தில் 4 சக்கர வாகனத்திற்கு ரூ.10 ஆயிரம், 3 சக்கர வாகனத்திற்கு ரூ.7 ஆயிரம், டூவீலர்களுக்கு ரூ.5 ஆயிரம் காப்பு தொகையாக செலுத்த வேண்டும்.

பங்கேற்க விரும்புவோர் அடையாள சான்றாக ஆதார், ரேஷன் கார்டு நகல் சமர்ப்பிக்க வேண்டும். ஏலம் எடுக்காதவர்களின் காப்பு தொகை திரும்ப தரப்படும். ஏலத்திற்கான பணத்தை ரொக்கமாக செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு 9498102221, 8300035657 ல் பேசலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X