தமிழ்நாடு

தொடர் உண்ணாவிரதம் இருக்க முடிவு பொன்னங்குப்பம் கிராம மக்கள் அறிவிப்பு

Added : அக் 04, 2021
Share
Advertisement
செஞ்சி : தேர்தல் புறக்கணிப்பு அறிவித்துள்ள பொன்னங்குப்பம் கிராம மக்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதம் அறிவித்துள்ளனர்.செஞ்சி ஒன்றியம், பொன்னங்குப்பம் ஊராட்சியின் துணை கிராமமாக துத்திப்பட்டு கிராமம் உள்ளது. பொன்னங்குப்பத்தில் குறைவான ஓட்டும், துத்திப்பட்டில் அதிக ஓட்டும் உள்ளன. கடந்த சில தேர்தலாக ஊராட்சித் தலைவர் பதவியை துத்திப்பட்டில் ஏலம் விட்டு தேர்வு

செஞ்சி : தேர்தல் புறக்கணிப்பு அறிவித்துள்ள பொன்னங்குப்பம் கிராம மக்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதம் அறிவித்துள்ளனர்.

செஞ்சி ஒன்றியம், பொன்னங்குப்பம் ஊராட்சியின் துணை கிராமமாக துத்திப்பட்டு கிராமம் உள்ளது. பொன்னங்குப்பத்தில் குறைவான ஓட்டும், துத்திப்பட்டில் அதிக ஓட்டும் உள்ளன. கடந்த சில தேர்தலாக ஊராட்சித் தலைவர் பதவியை துத்திப்பட்டில் ஏலம் விட்டு தேர்வு செய்கின்றனர்.இதன் காரணமாக பொன்னங்குப்பம் கிராமத்தினர் இந்த முறை தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.பொன்னங்குப்பம் கிராமத்திற்கான 3 வார்டு உறுப்பினர் பதவிக்கு கொடுத்திருந்த வேட்பு மனுவையும் திரும்ப பெற்றனர்.வீடுகளுக்கு பூத் சிலிப் கொடுக்கச் சென்ற பணியாளர்களையும் பூத் சிலிப் வாங்காமல் திருப்பி அனுப்பினர்.

இந்நிலையில் இன்று 4ம் தேதி முதல் தேர்தல் நடைபெறும் 6ம் தேதி வரை 3 நாட்களுக்கு தொடர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக பொன்னங்குப்பம் கிராம மக்கள் நேற்று மாலை அறிவித்தனர்.இதையடுத்து டி.எஸ்.பி., இளங்கோவன் மற்றும் போலீசார் பொன்னங்குப்பம் கிராமத்திற்கு சென்று உண்ணாவிரதம் இருக்க அனுமதி இல்லை. என தெரிவித்துள்ளனர். இதனால் பொன்னங்குப்பம் கிராமத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X