சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் பிரசாரத்தில் புகுந்த கார் திருக்கோவிலுார் அருகே ஒருவர் பலி

Added : அக் 04, 2021
Share
Advertisement
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே ஊராட்சித் தலைவர் பிரசார கூட்டத்தில் நுழைந்த சுமோ கார் மோதி ஒருவர் இறந்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட கடம்பூர் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு அதே ஊரைச் சேர்ந்த வைத்தி, இந்திராணி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று காலை

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே ஊராட்சித் தலைவர் பிரசார கூட்டத்தில் நுழைந்த சுமோ கார் மோதி ஒருவர் இறந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட கடம்பூர் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு அதே ஊரைச் சேர்ந்த வைத்தி, இந்திராணி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று காலை கடம்பூர் காலனியைச் சேர்ந்த பழனி மகன் தேவேந்திரன், 17; சுமோ காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார், வைத்திக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த வீராசாமி, 40; வீரன், 44; உட்பட 5 பேர் மீது மோதியது. இதில் மூவருக்கு லேசான சிராய்ப்பு காயம் ஏற்பட்டது.பலத்த காயமடைந்த வீராசாமி, வீரன் இருவரையும் சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வீராசாமி மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் இறந்தார். வீரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.விபத்து குறித்து திருப்பாலப்பந்தல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், வைத்தி தரப்பைச் சேர்ந்தவர்கள், வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர் தரப்பினர் காரை மோதி விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறி திருக்கோவிலுார் - சங்கராபுரம் சாலையில் காலை 10:20 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த எஸ்.பி., ஜியாவுல்ஹக், டி.எஸ்.பி., கங்காதரன், இன்ஸ்பெக்டர் பாபு, சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததைத் தொடர்ந்து 10:30 மணியளவில் கலைந்து சென்றனர்.இந்த சம்பவத்தால், கிராமத்தில் இரு தரப்பினரிடையே தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பாலப்பந்தல் போலீசார் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய சிறுவன் தேவேந்திரனை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X