தமிழ்நாடு

23 மாவட்ட கவுன்சிலருக்கு அ.தி.மு.க., - தி.மு.க., நேரடி... போட்டி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்ற தீவிர பிரசாரம்

Added : அக் 04, 2021
Share
Advertisement
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 23 இடங்களில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் நேரடியாக போட்டியிடுகின்றனர்.விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில், 28 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 293 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 688



விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 23 இடங்களில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் நேரடியாக போட்டியிடுகின்றனர்.
விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில், 28 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 293 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 688 கிராம ஊராட்சி தலைவர், 5,088 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 6,097 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக, கடந்த மாதம் 15ம் தேதி துவங்கிய வேட்புமனு தாக்கல் 22ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில், 24,194 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ததில், 141 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 24,053 மனுக்கள் ஏற்கப்பட்டது.இதில், 3,692 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. இதில், 22 கிராம ஊராட்சி தலைவர், 357 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 379 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 5,715 பதவிகளுக்கு 19,982 பேர் நேரடியாக தேர்தல் களத்தில் உள்ளனர்.இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 23 இடங்களில் அ.தி.மு.க., - தி.மு.க., வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிடுகின்றனர். பா.ம.க., 14 இடங்களிலும், நாம் தமிழர் கட்சி 13 இடங்களிலும், பா.ஜ., 3 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 9 இடங்களிலும், தே.மு.தி.க., 20 இடங்களிலும், ஆம் ஆத்மி 2 இடங்களிலும் போட்டியிடுகின்றனர்.இதேபோன்று, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு காணை ஒன்றியத்தில் தி.மு.க., 19, அ.தி.மு.க., 21, பா.ஜ., 2, தே.மு.தி.க., 6 இடங்களிலும், கோலியனுாரில் தி.மு.க., 16, அ.தி.மு.க., 18, பா.ஜ., மற்றும் தே.மு.தி.க., தலா 2 இடங்களிலும், முகையூரில் தி.மு.க., 19, அ.தி.மு.க., 22, பா.ம.க., 1, பா.ஜ., 3, தே.மு.தி.க., 11 இடங்களிலும் போட்டியிடுகின்றனர்.மேலும், மயிலத்தில் தி.மு.க., 19, அ.தி.மு.க., 20, ப.ஜ., 1 இடங்களிலும், மேல்மலையனுாரில் தி.மு.க., 24, அ.தி.மு.க., 22, பா.ஜ., 2, தே.மு.தி.க., 14 இடங்களிலும், திருவெண்ணெய்நல்லுாரில் தி.மு.க., 8, அ.தி.மு.க., 11, பா.ஜ., 1, தே.மு.தி.க., 8 இடங்களிலும், வானுாரில் தி.மு.க., 21, அ.தி.மு.க., 25, தே.மு.தி.க., 2 இடங்களிலும் போட்டியிடுகின்றனர்.இதேபோன்று, விக்கிரவாண்டியில் தி.மு.க., 19, அ.தி.மு.க., 20, தே.மு.தி.க., 2 இடங்களிலும், செஞ்சியில் தி.மு.க.,-அ.தி.மு.க., தலா 21, பா.ஜ., 2, தே.மு.தி.க., 12 இடங்களிலும், கண்டமங்கலத்தில் தி.மு.க., 22, அ.தி.மு.க., 24, பா.ஜ., 2, தே.மு.தி.க., 9 இடங்களிலும், மரக்காணத்தில் தி.மு.க., 24, அ.தி.மு.க., 25, பா.ஜ., 1, தே.மு.தி.க., 10 இடங்களிலும் போட்டியிடுகின்றனர்.ஒலக்கூரில் தி.மு.க., - அ.தி.மு.க., தலா 13, பா.ஜ., 2, தே.மு.தி.க., 6 இடங்களிலும், வல்லத்தில் தி.மு.க., 19, அ.தி.மு.க., 20, பா.ஜ., 2, தே.மு.தி.க., 11 ஆகிய இடங்களில் போட்டியிடுகின்றனர். மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு தி.மு.க.,-அ.தி.மு.க.,வினர் பெரும்பான்மையான இடங்களில் நேரடியாக தேர்தல் களத்தில் உள்ளனர். தி.மு.க.,வினர் மற்றும் அ.தி.மு.க.,வினர் தங்களின் ஆட்சியின்போது நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே மாறி, மாறி பிரசாரம் செய்து வருகின்றனர்.இதனால், மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான பகுதிகளில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி உள்ளாட்சியில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் தீவிரமாக தேர்தல் களத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X