சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'போலி' இணையதளம்; போலீசார் எச்சரிக்கை

Added : அக் 04, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : 'போலி இணையதளங்களை உண்மை என நம்பி ஏமாற வேண்டாம்'என, திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.வளர்ந்து வரும் இணைய உலகில் பண பரிவர்த்தனை, பொருட்கள் வாங்குதல் என அனைத்தும் ஆன்லைன் மையமாகி உள்ளது. இதனை சரியாக பயன்படுத்தும் மோசடி கும்பல்கள் போலி இணையதளங்களை உருவாக்கி பணம் பறித்து வருகின்றன.சில பயனாளர்கள் உண்மையான தளம் என நினைத்து,

திண்டுக்கல் : 'போலி இணையதளங்களை உண்மை என நம்பி ஏமாற வேண்டாம்'என, திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வளர்ந்து வரும் இணைய உலகில் பண பரிவர்த்தனை, பொருட்கள் வாங்குதல் என அனைத்தும் ஆன்லைன் மையமாகி உள்ளது. இதனை சரியாக பயன்படுத்தும் மோசடி கும்பல்கள் போலி இணையதளங்களை உருவாக்கி பணம் பறித்து வருகின்றன.சில பயனாளர்கள் உண்மையான தளம் என நினைத்து, ஆன்லைன் பர்சேசிங், பண பரிவர்த்தனை செய்கின்றனர். பணம் செலுத்திய பின் தான் அது போலியானது என்பதை உணர்கின்றனர்.

மாவட்டத்தில் தினமும் 15 பேர் வரை ஏமாறுகின்றனர். பறிபோகும் பணம் அதிகபட்சமே ரூ.4000 வரை என்பதால் பெரும்பாலும் எவரும் புகார் அளிப்பதில்லை.போலீசார் கூறுகையில்,''உண்மையான இணையதளம் தான் என்பதை உறுதிபடுத்திய பின்பே பண பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும். விழிப்புணர்வு இல்லையென்றால் குற்றத்தை தடுப்பது கடினம்'', என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X