சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பரிசுப் பொருட்கள் வழங்கல் வேட்பாளர் மீது வழக்குப் பதிவு

Added : அக் 04, 2021
Share
Advertisement
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அருகே ஊராட்சித் தலைவர் வேட்பாளரிடமிருந்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்களை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியபகண்டை ஊராட்சியில், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் விநியோகிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தேர்தல் பறக்கும்படை அலுவலர், துணை தாசில்தார்

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அருகே ஊராட்சித் தலைவர் வேட்பாளரிடமிருந்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்களை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியபகண்டை ஊராட்சியில், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் விநியோகிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தேர்தல் பறக்கும்படை அலுவலர், துணை தாசில்தார் விஜயன் மற்றும் போலீசார் நேற்று மாலை 3:30 மணியளவில் அப்பகுதியில் சோதனை செய்தனர்.அப்போது, பெரியபகண்டை ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும், அரிகிருஷ்ணன், 68; என்பவர் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கியுள்ளார்.

உடன், அவரிடம் விசாரணை நடத்தி, அவரிடமிருந்து மரத்தால் செய்யப்பட்ட 14 சிறிய அளவிலான விநாயகர் சிற்பங்கள், 8 துண்டுகள், 14 மஞ்சள் கயிறு, குங்குமம் மற்றும் 187 பூட்டு, சாவிகள் உள்ளிட்ட 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்து, பகண்டைகூட்ரோடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இது குறித்து பறக்கும்படை அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் அரிகிருஷ்ணன் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X