பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சியில் ஏ.கே.டி., டெக்ஸ்டைல்ஸ் திறப்பு விழா

Added : அக் 04, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., கல்விக் குழுமத்தின் ஏ.கே.டி., டெக்ஸ்டைல்ஸ் திறப்பு விழா நேற்று நடந்தது.விழாவிற்கு, கல்விக் குழும தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். தென்னிந்தியாவின் முன்னணி ஜவுளி நிறுவனமான சிவா டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர்கள் ரவிச்சந்திரன், சரவணன் திறந்து வைத்தனர்.தொழிலதிபர் மணிகண்டன் - வள்ளி
 கள்ளக்குறிச்சியில் ஏ.கே.டி., டெக்ஸ்டைல்ஸ் திறப்பு விழா

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., கல்விக் குழுமத்தின் ஏ.கே.டி., டெக்ஸ்டைல்ஸ் திறப்பு விழா நேற்று நடந்தது.விழாவிற்கு, கல்விக் குழும தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.

நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். தென்னிந்தியாவின் முன்னணி ஜவுளி நிறுவனமான சிவா டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர்கள் ரவிச்சந்திரன், சரவணன் திறந்து வைத்தனர்.தொழிலதிபர் மணிகண்டன் - வள்ளி தம்பதியினர் குத்துவிளக்கேற்றினர். முதல் விற்பனையை டாக்டர் அபிநயா துவக்கி வைத்தார். ஏ.கே.டி., குழும செயலாளர் லட்சுமிபிரியா பெற்றுக் கொண்டார்.திறப்பு விழாவையொட்டி பாய்ஸ், மென்ஸ், சாரீஸ், லேடீஸ், காம்போ ஆபர், பட்டு ஜவுளிகள், பேன்சி ரகங்கள் என எண்ணற்ற ஆடைகளை கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், தியாகதுருகம், திருக்கோவிலுார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கிராமம் மற்றும் நகர்புறத்தை சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும் தரமான ஜவுளி ரகங்களை மலிவு விலையில் வாங்கி மகிழ்ந்தனர்.

தீபாவளி கலெக்ஷனாக அனுபவமிக்க நிபுணர்களைக் கொண்டு இந்தியா முழுதும் தேர்ந்தெடுக்கப்பட்ட டிரெண்டிங் ஆடைகள் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. திறப்பு விழா சலுகையாக 1000 ரூபாய்க்கு மேல் ஜவுளி வாங்கிய அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.ஏ.கே.டி., கல்வி நிறுவனம் மற்றும் சிவா டெக்ஸ்டைல்ஸ் ஊழியர்களை நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் கவுரவித்தார்.பின், அவர் கூறுகையில், 'டெக்ஸ்டைல்ஸில், சகாய விலையும் நல்ல தரமும் இரு கண்களாகக் கொண்டு செயல்படுவோம். ஜவுளி விற்பனையில் அனைவரது நம்பிக்கை மற்றும் பாராட்டினை நிச்சயம் பெறுவோம். அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X