சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.30 லட்சம் கொள்ளை வழக்கு: மேலும் 3 வாலிபர்கள் கைது

Added : அக் 04, 2021
Share
Advertisement
மரக்காணம் : சேலம் மாவட்டம், ஆத்துாரைச் சேர்ந்தவர் ராஜா, 32; வெள்ளரிக்காய் வியாபாரி. இவர் கடந்த மாதம் 15ம் தேதி மரக்காணம் பகுதியில் உள்ள விவசாயிகளிடம் வெள்ளரிக்காய் பயிரிட பணம் பட்டுவாடா செய்ய ஸ்கார்பியோ காரில் 30 லட்சம் ரூபாயுடன் வந்தார்.பைக்கில் பின் தொடர்ந்த கும்பல், பெருமுக்கல் பஸ் நிறுத்தம் அருகே காரை வழிமறித்து 30 லட்சம் ரூபாயை கத்திமுனையில் கொள்ளையடித்துச்
 ரூ.30 லட்சம் கொள்ளை வழக்கு: மேலும் 3 வாலிபர்கள் கைது

மரக்காணம் : சேலம் மாவட்டம், ஆத்துாரைச் சேர்ந்தவர் ராஜா, 32; வெள்ளரிக்காய் வியாபாரி. இவர் கடந்த மாதம் 15ம் தேதி மரக்காணம் பகுதியில் உள்ள விவசாயிகளிடம் வெள்ளரிக்காய் பயிரிட பணம் பட்டுவாடா செய்ய ஸ்கார்பியோ காரில் 30 லட்சம் ரூபாயுடன் வந்தார்.

பைக்கில் பின் தொடர்ந்த கும்பல், பெருமுக்கல் பஸ் நிறுத்தம் அருகே காரை வழிமறித்து 30 லட்சம் ரூபாயை கத்திமுனையில் கொள்ளையடித்துச் சென்றனர்.இது குறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.எஸ்.பி., ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் திண்டிவனம் ஏ.எஸ்.பி., அபிஷேக் குப்தா மேற்பார்வையில் தனிப்படை அமைத்து, பன்னீர்செல்வம், மணிமாறன், மனோஜ்குமார் உட்பட 6 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 18.40 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.இந்நிலையில், நேற்று பிரம்மதேசம் இன்ஸ்பெக்டர் சீனிபாபு, சப் இன்ஸ்பெக்டர் சசிக்குமார் ஆகியோர் திருச்சி - திண்டிவனம் பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது பதிவெண் இல்லாமல் வந்த காரை நிறுத்தினர். காரை நிறுத்தியதும் அதிலிருந்து 3 பேர் இறங்கி தப்பியோடினர்.போலீசார் துரத்திச் சென்று அவர்களைப் பிடித்து விசாரித்தனர்.

அதில், சென்னை, தாம்பரம் பகுதியைச் சேர்ந்த கோவில்ராஜ் மகன் சுஜித், 28; செங்கல்பட்டைச் சேர்ந்த குமார் மகன் அசோக், 26; வாசு மகன் அரவிந்த், 27; என்பதும் கடந்த மாதம் வெள்ளரிக்காய் வியாபாரியிடம் கொள்ளையடித்த நபர்கள் என்பதும் தெரியவந்தது.உடன் மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 6 லட்சம் ரூபாய், அவர்கள் வந்த 'ஐ20' கார் மற்றும் அவர்கள் அளித்த தகவலின்படி, கொள்ளையடிக்க பயன்படுத்திய கே.டி.எம்., பைக் மூன்று, 2 கத்திகளையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X