சலுகை கட்டணத்தில் மருத்துவம் கோவையில் சேவாபாரதி ஏற்பாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சலுகை கட்டணத்தில் மருத்துவம் கோவையில் சேவாபாரதி ஏற்பாடு

Added : அக் 04, 2021 | கருத்துகள் (1)
Share
கோவை:சேவாபாரதி தென் தமிழ்நாடு அமைப்பு சார்பில், 'ஆச்சார்யா துளசி ஜெயின் சமூக அறக்கட்டளை' உடன் இணைந்து, கோவை ஆர்.எஸ்.புரம் கிழக்கு வெங்கடசாமி சாலை சேவாபாரதி சற்குரு சேவாஸ்ரம வளாகத்தில், நிரந்தர கிளினிக் துவங்கப்பட்டுள்ளது.இந்த கிளினிக் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை செயல்படும். சிறப்பு மருத்துவ நிபுணர்களிடம், தினமும் இலவச ஆலோசனை பெறலாம். மிகக்குறைந்த கட்டணத்தில்
 சலுகை கட்டணத்தில் மருத்துவம் கோவையில் சேவாபாரதி ஏற்பாடு

கோவை:சேவாபாரதி தென் தமிழ்நாடு அமைப்பு சார்பில், 'ஆச்சார்யா துளசி ஜெயின் சமூக அறக்கட்டளை' உடன் இணைந்து, கோவை ஆர்.எஸ்.புரம் கிழக்கு வெங்கடசாமி சாலை சேவாபாரதி சற்குரு சேவாஸ்ரம வளாகத்தில், நிரந்தர கிளினிக் துவங்கப்பட்டுள்ளது.இந்த கிளினிக் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை செயல்படும். சிறப்பு மருத்துவ நிபுணர்களிடம், தினமும் இலவச ஆலோசனை பெறலாம்.
மிகக்குறைந்த கட்டணத்தில் ரத்தப்பரிசோதனை செய்து கொள்ளலாம்.அறுவை சிகிச்சை மற்றும் விரிவான மருத்துவத்துக்கு, முன்னணி மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்து, காப்பீட்டுத்திட்டத்தில் சிகிச்சை பெற வசதி செய்யப்படுகிறது. முன்பதிவுக்கு, 88389 03600 என்ற எண்ணில் அழைக்கலாம்.இதுதவிர, வாரம்தோறும் சிறப்பு முகாம் நடக்கிறது. நேற்று நடந்த முகாமில், 347 பேருக்கு ரத்தம், கொலஸ்ட்ரால், தைராய்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு சிகிச்சையளிக்கும் டாக்டர் கார்த்திக் கூறுகையில், ''நாளொன்றுக்கு ஐந்து முதல் 10 ஸ்பெஷலிஸ்ட்டுகள் வருகை தருகின்றனர். சிறப்பான மருத்துவ சேவை அளிக்கிறோம்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X