சிங்காநல்லுார் அரசு அடுக்குமாடி வீடுகளை இடித்து அகற்ற வீட்டுவசதி வாரியம் முடிவு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிங்காநல்லுார் அரசு அடுக்குமாடி வீடுகளை இடித்து அகற்ற வீட்டுவசதி வாரியம் முடிவு

Added : அக் 04, 2021
Share
கோவை:சிங்காநல்லுாரிலுள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான சிதிலமடைந்த 420 அடுக்குமாடி குடியிருப்புகளை, முதற்கட்டமாக இடித்து அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.சிங்காநல்லுார் உழவர் சந்தை பின்புறம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தவணை முறையில் வழங்கிய அடுக்குமாடி குடியிருப்புகள், சிதிலமடைந்து குடியிருக்க லாயக்கற்று உள்ளது.சிதிலமடைந்த வீடுகளை

கோவை:சிங்காநல்லுாரிலுள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான சிதிலமடைந்த 420 அடுக்குமாடி குடியிருப்புகளை, முதற்கட்டமாக இடித்து அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.சிங்காநல்லுார் உழவர் சந்தை பின்புறம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தவணை முறையில் வழங்கிய அடுக்குமாடி குடியிருப்புகள், சிதிலமடைந்து குடியிருக்க லாயக்கற்று உள்ளது.சிதிலமடைந்த வீடுகளை இடித்து விட்டு, வேறு புதிய கட்டடம் கட்டிக்கொடுக்க வீட்டு உரிமையாளர்கள் கடந்த அ.தி.மு.க., ஆட்சிக்காலத்திலிருந்து தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அப்போதைய அரசு கண்டுகொள்ளாமலேயே காலம் கடத்தி வந்தது.இந்நிலையில், நேற்று முன் தினம் பெய்த மழைக்கு, சிதிலமடைந்த அடுக்குமாடி கட்டடத்திலிருந்த மூன்று வீடுகளின் சில பகுதிகள் இடிந்து விழுந்தன. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும், வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.இதையடுத்து, குடியிருப்பதற்கு லாயக்கற்ற வீடுகளை இடித்து அப்புறப்படுத்த, வீட்டுவசதித்துறை அதிகாரிகளுக்கு தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி அறிவுறுத்தியுள்ளார்.தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், 'சிங்காநல்லுார் அடுக்குமாடி குடியிருப்பில், ஏ பிரிவில் 612, பி பிரிவில் 300, டி பிரிவில் 48 வீடுகள் என 960 வீடுகள் உள்ளன. இதில் 420 வீடுகள் சிதிலமடைந்து உள்ளன. முதற்கட்டமாக இந்த வீடுகள் இடித்து அப்புறப்படுத்தப்படும். அதன் பின், மீதமுள்ள வீடுகளில் குடியிருப்பவர்கள் வெளியேற்றப்பட்டு அதுவும் இடிக்கப்படும்.அரசு, வீட்டு உரிமையாளர்களுக்கு கொடுத்த வாக்குப்படி 400, 600,800 சதுர அடிகளில் அடுக்குமாடி வீடுகள் மூன்று தளங்களாக கட்டித்தரப்படும். இதற்கான பணிகள் விரைவாக துவங்கும்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X