பொது செய்தி

தமிழ்நாடு

காந்தி ஜெயந்திக்கு விடுமுறை 'கட்': 153 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

Added : அக் 04, 2021
Share
Advertisement
கோவை:காந்தி ஜெயந்தியன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் விதி மீறிய, 153 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கோவை தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர்(அமலாக்கம்) வெங்கடேசன் அறிக்கை:தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தியன்று, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி பகுதிகளில், தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா அல்லது பணிபுரிய அனுமதிக்கும்

கோவை:காந்தி ஜெயந்தியன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் விதி மீறிய, 153 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கோவை தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர்(அமலாக்கம்) வெங்கடேசன் அறிக்கை:தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தியன்று, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி பகுதிகளில், தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா அல்லது பணிபுரிய அனுமதிக்கும் பட்சத்தில் முன் அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளதா என, கடைகள், தொழில் நிறுவனங்கள் என, 204 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.இதில், தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாட்கள் சட்டத்தின் கீழ், காந்தி ஜெயந்திக்கு தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத மற்றும் முன் அறிவிப்பு அளிக்காத கடைகள், 67, உணவு நிறுவனங்கள், 82, மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், 4 கடைகள் என 153, நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X