பத்து நாளாகியும் தண்ணி வரலீங்க!| Dinamalar

பத்து நாளாகியும் தண்ணி வரலீங்க!

Added : அக் 04, 2021
Share
அன்னை இந்திரா நகரில் சங்கடம்சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜ் நகர் அருகே, அன்னை இந்திரா நகர் நான்காது வீதியில், சாக்கடை கால்வாயில் இருந்து, அப்புறப்படுத்தப்பட்ட கழிவு, சாலையில் அப்படியே விட்டுச் செல்லப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.- மேரி, அன்னை இந்திரா நகர்.ரத்தினபுரியில் நாய் தொல்லைரத்தினபுரி, முத்துகுமார் நகர் முதல் வீதியில்,

அன்னை இந்திரா நகரில் சங்கடம்சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜ் நகர் அருகே, அன்னை இந்திரா நகர் நான்காது வீதியில், சாக்கடை கால்வாயில் இருந்து, அப்புறப்படுத்தப்பட்ட கழிவு, சாலையில் அப்படியே விட்டுச் செல்லப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.- மேரி, அன்னை இந்திரா நகர்.

ரத்தினபுரியில் நாய் தொல்லைரத்தினபுரி, முத்துகுமார் நகர் முதல் வீதியில், தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. சாலையில் செல்வோரை இவை கடிக்க வருவதால், மக்கள் அச்சப்படுகின்றனர்.- ஸ்ரீராம், முத்துகுமார் நகர்.

சாக்கடை கால்வாய் அடைப்புமலுமிச்சம்பட்டி, அம்பாள் நகரில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது; துர்நாற்றம் வீசுகிறது.- சசிரேகா, அம்பாள் நகர்.

எல்.ஐ.சி., காலனியில் வெளிச்சமில்லைமாநகராட்சி, 76வது வார்டுக்கு உட்பட்ட, செல்வபுரம், எல்.ஐ.சி., காலனியில் உள்ள, மின் கம்பத்தில் (எண்: 6) கடந்த சில மாதங்களாக, விளக்கு எரிவதில்லை. - ரமேஷ், எல்.ஐ.சி., காலனி.

சாலையை செப்பனிடணும்மாநகராட்சி, 17வது வார்டுக்கு உட்பட்ட, வடவள்ளி, நவாவூர் பிரிவு, வெள்ளிங்கிரி நகர், முதல் கிராஸில், சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இச்சாலையை செப்பனிட வேண்டும்.- ரத்தினம், வெள்ளிங்கிரி நகர்.

சாக்கடை கால்வாயை துார்வாரணும்மாநகராட்சி, 95வது வார்டுக்கு உட்பட்ட, போத்தனுார், திருவள்ளுவர் நகர், லட்சுமி திருமண மண்டபம் எதிரில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கியுள்ளது. இக்கால்வாயை துார் வார வேண்டும்.- கார்த்திக், போத்தனுார்.

தண்ணீர் வருவதில்லைசுந்தராபுரம் - இடையர்பாளையம் ரோடு, மாச்சம்பாளையம் வாரச்சந்தை மைதானம் அருகில் உள்ள, போர்வெல் பழுதாகி, பத்து நாட்களுக்கும் மேலாகியும், சரிசெய்யப்படவில்லை. இதனால், இப்பகுதியில் தண்ணீர் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த போர்வெல் இதுபோன்று அடிக்கடி பழுதாவது குறித்து, மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. - கணேசன், ரவுண்டு ரோடு.

வடவள்ளியில் தெருநாய் தொல்லைவடவள்ளி, சிறுவாணி ரோட்டில், தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. சாலையில் இங்கும் அங்கும் கூட்டமாக, சுற்றித்திரியும் இவற்றால், இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.- சூரி, வடவள்ளி.

மின் கம்பத்தை மாற்றணும்சரவணம்பட்டி, ஜனதா நகர் மேற்கு பகுதி, வள்ளுவர் வீதியில் உள்ள, மின் கம்பம்(எண்: 51) சிதிலமடைந்துள்ளது. இக்கம்பத்தை அகற்றிவிட்டு, புது கம்பம் அமைக்க வேண்டும்.- ஆதிசிவன், வள்ளுவர் வீதி

தபால் நிலையம் வீதியில் நடக்க வழியில்லைபோத்தனுார், ரயில்வே ஸ்டேஷன் அருகே, தபால் நிலையம் வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் செல்ல வழியின்றி, சாலையில் தேங்கியுள்ளது. நடந்து செல்ல வழியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.- வினோத், போத்தனுார்.

சாலையை செப்பனிடவேண்டும்சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1, 'சி' பிளாக்கில், சாலை சிதிலமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இச்சாலையை செப்பனிட வேண்டும்.- சீனிவாசன், ஹவுசிங் யூனிட் பேஸ் 1.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X