மத்திய அரசும் வருவாய் இழக்கக்கூடாது: தொழில் துறையும் பாதிக்கப்படக்கூடாது: ஸ்மூத் கோரிக்கைகள் வைக்க கலந்தாலோசனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசும் வருவாய் இழக்கக்கூடாது: தொழில் துறையும் பாதிக்கப்படக்கூடாது: 'ஸ்மூத்' கோரிக்கைகள் வைக்க கலந்தாலோசனை

Added : அக் 04, 2021
Share
கோவை:மத்திய அரசு வருவாயும் இழக்கக்கூடாது; தொழில் துறையும் பாதிக்கப்படக்கூடாது என்ற வகையில் கோரிக்கைகள் முன்வைப்பது தொடர்பாக, தொழில் துறையினர் நேற்று கலந்தாலோசித்தனர்.கொரோனா ஊரடங்கு பாதிப்பால் சிரமங்களை சந்தித்த தொழில் துறையினர், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவர ஏதுவாக மத்திய, மாநில அமைச்சர்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து

கோவை:மத்திய அரசு வருவாயும் இழக்கக்கூடாது; தொழில் துறையும் பாதிக்கப்படக்கூடாது என்ற வகையில் கோரிக்கைகள் முன்வைப்பது தொடர்பாக, தொழில் துறையினர் நேற்று கலந்தாலோசித்தனர்.கொரோனா ஊரடங்கு பாதிப்பால் சிரமங்களை சந்தித்த தொழில் துறையினர், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவர ஏதுவாக மத்திய, மாநில அமைச்சர்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து வருகின்றனர்.

கொடிசியா, காட்மா என கோவையை சேர்ந்த தொழில் அமைப்புகளும், திருப்பூர், சென்னை, புதுச்சேரியை சேர்ந்த அமைப்புகள் என, 12 தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள், நேற்று ஆன்லைன் வாயிலாக ஜி.எஸ்.டி., எளிமையாக்குதல், வரி குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைப்பு தொடர்பாக கலந்தாலோசித்தனர்.

'கொடிசியா' தலைவர் ரமேஷ்பாபு கூறியதாவது:'ஜாப் ஆர்டர்'களுக்கான ஜி.எஸ்.டி.,யை, 12 சதவீதத்தில் இருந்து குறைப்பது, ஜி.எஸ்.டி., மாதத்துக்கு ஒரு முறை செலுத்தும் வகையில் எளிமைப்படுத்துவது, கடன் தவணை செலுத்த அவகாசம் உள்ளிட்ட கோரிக்கைகளை, மத்திய அரசிடம் முன்வைப்பது குறித்து கலந்தாலோசித்தோம்.மத்திய அரசும் வருவாய் இழக்கக்கூடாது; தொழில் துறையும் பாதிக்கப்படக்கூடாது என்ற வகையில், ஒரு சேர முடிவு எடுத்து, சரியான கோரிக்கைகளை முன்வைக்க முடிவு செய்துள்ளோம்.அடுத்த கட்ட கலந்தாலோசனைக்கு பிறகு, கோரிக்கைகள் இறுதி செய்யப்பட்டு, மத்திய அமைச்சர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X