பொது செய்தி

தமிழ்நாடு

திருமண மண்டபங்களில் பட்டாசுக்கடைக்கு தடை : உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கும் தீயணைப்புத்துறை

Added : அக் 04, 2021
Share
Advertisement
கோவை:திருமண மண்டபங்களில் பட்டாசு கடை அமைக்க மாட்டோம் என்று, வியாபாரிகளிடம் தீயணைப்பு துறையினர் எழுத்துபூர்வமாக எழுதி வாங்கி வருகின்றனர்.கோவை மாநகரில் கடந்த சில ஆண்டுகளாக, தடை உத்தரவை மீறி சட்டவிரோதமாக திருமண மண்டபங்களில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சில நேரங்களில் எதிர்பாராத விபத்துகளும் ஏற்படுகின்றன.இதனால் சென்னை

கோவை:திருமண மண்டபங்களில் பட்டாசு கடை அமைக்க மாட்டோம் என்று, வியாபாரிகளிடம் தீயணைப்பு துறையினர் எழுத்துபூர்வமாக எழுதி வாங்கி வருகின்றனர்.கோவை மாநகரில் கடந்த சில ஆண்டுகளாக, தடை உத்தரவை மீறி சட்டவிரோதமாக திருமண மண்டபங்களில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சில நேரங்களில் எதிர்பாராத விபத்துகளும் ஏற்படுகின்றன.
இதனால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழ்நாடு வெடி பொருள் சட்டம், 2008ன் படி திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாய கூடங்களுக்கு அருகில், பட்டாசு கடைகள் அமைக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த நீதிமன்ற உத்தரவு, கோவை மாவட்டத்தின் பிற பகுதிகளில் முறையாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாநகரில் மட்டும் கடந்த சில ஆண்டுகளாக அரசியல் தலையீடுகள் காரணமாக சரியாக பின்பற்றப்படுவதில்லை.இந்நிலையில் நடப்பாண்டு நவ., 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக கோவை மாநகரில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க வியாபாரிகளிடம் இருந்து, ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.ஆனால், மாவட்டத்தில் திருமண மண்டபங்களில் யாரும் பட்டாசு கடைகள் அமைக்க கூடாது என்று கலெக்டர் எச்சரித்துள்ள நிலையில், கோவை மாநகரில் திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்களில் பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பங்களை, மாநகர போலீசார் பெற்றுள்ளனர்.
இதன் காரணமாக நடப்பாண்டும் திருமண மண்டபங்களில் சட்டவிரோத பட்டாசு கடைகள் அமைக்கப்படும் விவகாரம் சர்ச்சையை எழுப்பியுள்ளது.25 கிலோ பட்டாசு, 100 கிலோ மத்தாப்புபட்டாசு கடைகள் அமைக்க, விண்ணப்பித்தவர்களிடம் தீயணைப்பு துறை சார்பில், 'திருமண மண்டபம், சமுதாயக்கூடம், பஸ் ஸ்டாண்ட், பொதுமக்கள் நெருக்கடி மிகுந்த இடம், தற்காலிக இடத்தில் பட்டாசு கடைகள் அமைக்க மாட்டோம்; 25 கிலோ பட்டாசு, மத்தாப்பு 100 கிலோ மட்டுமே இருப்பு வைத்து விற்பனை செய்வோம்' என, ஒரு உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X