பொது செய்தி

தமிழ்நாடு

நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

Added : அக் 04, 2021
Share
Advertisement
தொண்டாமுத்தூர்:கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால், நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.கோவை மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதன் அடிவார பகுதிகளில், கடந்த 4 நாட்களாக சாரல் மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை, சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதியில், கனமழை பெய்தது.இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி
 நொய்யல் ஆற்றில்  நீர்வரத்து அதிகரிப்பு

தொண்டாமுத்தூர்:கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால், நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.கோவை மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதன் அடிவார பகுதிகளில், கடந்த 4 நாட்களாக சாரல் மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை, சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதியில், கனமழை பெய்தது.இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நீரோடைகளில், நீர்வரத்து அதிகரித்தது. இதனையடுத்து, நொய்யல் ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்தது. நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி தடுப்பணையில், மதகு வழியாக மட்டும் நீர் வெளியேறி வந்த நிலையில், தற்போது கனமழையால், தடுப்பணை முழுவதும் நீர் நிரம்பி வழிகிறது.சித்திரைச்சாவடி தடுப்பணைக்கு, நேற்று மணிக்கு, 400 கன அடி நீர் வந்தது. இதனால், சுற்றுப்புற விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X