பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரியில் கதர் விற்பனை: ரூ. 72 லட்சம் இலக்கு

Added : அக் 04, 2021
Share
Advertisement
ஊட்டி:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 72 லட்சம் ரூபாய் கதர் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஊட்டியில் மகாத்மா காந்தியின், 153 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு. ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு, வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, ஊட்டி காதிகிராப்ட் விற்பனை நிலையத்தில்

ஊட்டி:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 72 லட்சம் ரூபாய் கதர் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஊட்டியில் மகாத்மா காந்தியின், 153 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு. ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு, வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, ஊட்டி காதிகிராப்ட் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகை சிறப்பு கதர் விற்பனையை துவக்கி வைத்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 2021--22ம் ஆண்டிற்கு கதர் விற்பனை இந்த ஆண்டு, 72 லட்சம் ரூபாய் வரை விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், தீபாவளி சிறப்பு தள்ளுபடியாக கதர், பட்டு, பாலிஸ்டர், 30 சதவீதம்; உல்லன், 20 சதவீதமும் சிறப்பு சலுகையாக விற்பனை செய்யப்படுகிறது.அதிகாரிகள் கூறுகையில், 'பொதுமக்கள் அனைவரும் கிராம தொழிலை மேம்படுத்தும் வகையில், காதிகிராப்ட் நிலையத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்க முன்வர வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X