மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Added : அக் 04, 2021
Share
Advertisement
கோத்தகிரி;கோத்தகிரி- -மேட்டுப்பாளையம் சாலையில், நேற்று முன்தினம் இரவு மரம் மற்றும் மின் கம்பம் விழுந்ததால், மூன்று மணி நேரம், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு, விடிய, விடிய இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழையில், கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில், அரவேனு அருகே, இரவு, 10:00 மணிக்கு மின்கம்பம் சாலையில்

கோத்தகிரி;கோத்தகிரி- -மேட்டுப்பாளையம் சாலையில், நேற்று முன்தினம் இரவு மரம் மற்றும் மின் கம்பம் விழுந்ததால், மூன்று மணி நேரம், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு, விடிய, விடிய இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழையில், கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில், அரவேனு அருகே, இரவு, 10:00 மணிக்கு மின்கம்பம் சாலையில் விழுந்தது.இதேபோல, குஞ்சப்பனை பகுதியில் பெரிய மரம் வேரோடு பெயர்ந்து விழுந்தது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்தடையும் ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு, நெடுஞ்சாலை, மின்சார துறையினர் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, மரம் மற்றும் மின் கம்பத்தை அகற்றி, சாலையை சீரமைத்தனர்.இதனையடுத்து, மூன்று மணி நேரம் நீடித்த போக்குவரத்து பாதிப்பு இரவு, 1:00 மணிக்கு சீரானதை அடுத்து, வாகனங்கள் சென்றன. மின்தடையும் நீங்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X