சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிலில் இருந்த சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்

Added : அக் 04, 2021
Share
Advertisement
கோத்தகிரி:கோத்தகிரி அருகே அனுமதி இல்லாமல், குடிலில் தங்க வைக்கப்பட்ட சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.கோத்தகிரி பகுதியில், 100க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள், போதிய பாதுகாப்பு இல்லாமல், செயல்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று, குறைந்துள்ள நிலையில், சமவெளி பகுதிகளில் இருந்து, நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருவது

கோத்தகிரி:கோத்தகிரி அருகே அனுமதி இல்லாமல், குடிலில் தங்க வைக்கப்பட்ட சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.கோத்தகிரி பகுதியில், 100க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள், போதிய பாதுகாப்பு இல்லாமல், செயல்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று, குறைந்துள்ள நிலையில், சமவெளி பகுதிகளில் இருந்து, நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருவது தொடர்கிறது.
இந்நிலையில், கோத்தகிரி ஆடுபெட்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக குடில்கள் அமைத்து, சுற்றுலா பயணிகள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக, வருவாய் துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.அதன்படி, கோத்தகிரி தாசில்தார் சீனிவாசன் தலைமையில், வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது, அங்கு பாதுகாப்பில்லாமல், 90 சுற்றுலா பயணிகள் தங்க வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.இதனை தொடர்ந்து போலீசார் உதவியுடன், அங்கு தங்கியிருந்த சுற்றுலா பயணிகளை வருவாய் துறையினர் வெளியேற்றினர். அதிகாரிகள் கூறுகையில்,'ஐகோர்ட் உத்தரவை மீறி பயணிகளை தங்க வைத்த, உரிமையாளர் மீது, சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X