பொது செய்தி

தமிழ்நாடு

புலி சுட்டுக் கொல்லப்பட மாட்டாது! தலைமை வன உயிரின பாதுகாவலர் உறுதி

Added : அக் 04, 2021
Share
Advertisement
கூடலுார்;''மசினகுடியில் தேடப்படும் புலி, சுட்டு கொல்லப்பட மாட்டாது,'' என, தலைமை முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் தெரிவித்தார்.நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலையில், சந்திரன், 51, மசினகுடியில் மங்களபசுவன், 85, ஆகியோரை சமீபத்தில் புலி தாக்கி கொன்றது. இதுவரை 4 பேரை இந்த புலி கொன்றுள்ளது.மக்கள் போராட்டத்தை தொடர்ந்து, புலியை வேட்டையாட வனத்துறை
 புலி சுட்டுக் கொல்லப்பட மாட்டாது! தலைமை வன உயிரின பாதுகாவலர் உறுதி

கூடலுார்;''மசினகுடியில் தேடப்படும் புலி, சுட்டு கொல்லப்பட மாட்டாது,'' என, தலைமை முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் தெரிவித்தார்.நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலையில், சந்திரன், 51, மசினகுடியில் மங்களபசுவன், 85, ஆகியோரை சமீபத்தில் புலி தாக்கி கொன்றது. இதுவரை 4 பேரை இந்த புலி கொன்றுள்ளது.
மக்கள் போராட்டத்தை தொடர்ந்து, புலியை வேட்டையாட வனத்துறை உத்தரவிட்டது. வனத்துறையினருடன், தமிழக அதிரடிப்படை மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாரும் மசினகுடி பகுதியில், புலியை தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன் தினமும் புலி சிக்கவில்லை.இந்நிலையில், மசினகுடியில் புலியை பிடிக்கும் பணிகளை, முதன்மை தலைமை வன உயிரின காப்பாளார் சேகர்குமார் நீரஜ், நேற்று, வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை டாக்டர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அவர் கூறுகையில், ''எக்காரணத்தைக் கொண்டும், புலி சுட்டு கொல்லப்படமாட்டாது. உயிருடன் பிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. அதற்கான பணிகளில் கால்நடை டாக்டர்கள், வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்,'' என்றார்.வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில்,''புலியை தேடும் பணியில், மூன்று ட்ரோன் கேமராக்கள், 10 தெர்மல் கேமராக்கள், 60 தானியங்கி கேமராக்கள், 20 டிஜிட்டல் வாக்கி டாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தேடுதல் பணியில், பல குழுக்கள் ஈடுபட்டுள்ளன. வனவிலங்கு தாக்கி இறந்தவர் குடும்பத்துக்கு நிவாரண தொகை, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்,'' என்றார்.
அதிரடிப்படை 'வாபஸ்'மசினகுடியில் நேற்று நடந்த தேடுதல் பணியின்போது, முதுமலையில் இருந்து, இரு கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டன. 'புலி சுட்டுக் கொல்லப்பட மாட்டாது' என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து, தமிழக சிறப்பு அதிரடிப்படை, நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று வாபஸ் ஆகினர். புலியை தேடும், பணியில் ஈடுபடவில்லை. தேவைபட்டால் இவர்களை அழைக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X