தடுத்து நிறுத்தம்; உணர்ச்சி பொங்கிய பிரியங்கா

Updated : அக் 04, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (54)
Share
Advertisement
லக்னோ: உ.பி.,யில் நடந்த வன்முறையில் பலியான விவசாயிகள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச்சென்ற காங்., தலைவர் சோனியாவின் மகளும், காங்., பொதுசெயலருமான பிரியங்கா போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்நேரத்தில் பிரியங்கா போலீசாருடன் கடும் வாக்குவாத்ததில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.உ .பி., மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் துணை முதல்வருக்கு, வேளாண் சட்டங்கள்

லக்னோ: உ.பி.,யில் நடந்த வன்முறையில் பலியான விவசாயிகள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச்சென்ற காங்., தலைவர் சோனியாவின் மகளும், காங்., பொதுசெயலருமான பிரியங்கா போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்நேரத்தில் பிரியங்கா போலீசாருடன் கடும் வாக்குவாத்ததில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.latest tamil news


உத்தரபிரதேசம் லக்கிம்பூர்கேரியில் வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பகுதிக்கு வரும் துணை முதல்வருக்கு எதிராக கருப்பு கொடி காட்ட விவசாயிகள் திரண்டனர். அப்போது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கார் மோதியதில் 2 பேர் இறந்தனர். இதனால் ஏற்பட்ட வன்முறையில் 8 விவசாயிகள் பலியாயினர். பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா லக்கிம்பூர் செல்ல முயன்றார். அவரை போலீசார் மாவட்டத்துக்குள் அனுமதிக்கவில்லை. போலிசாருடன் பிரியங்கா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.அரசியல் தலைவர்கள் வருகையால் மேலும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


உ .பி., மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் துணை முதல்வருக்கு, வேளாண் சட்டங்கள் தொடர்பாக கருப்பு கொடி காட்ட விவசாயிகள் திரண்டிருந்தனர். அந்நேரத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியாயினர்.அதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 8 விவசாயிகள் பலியாகினர்.

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அரசியல் தலைவர்கள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர். இப்பகுதி நோக்கி அரசியல் தலைவர்கள் படையெடுத்து வந்தால் மேலும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil newsஇந்நிலையில் பிரியங்கா தனது ஆதரவாளர்களுடன் லக்கிம்பூர் நோக்கி வந்தார். ஆனால் போலீசார் அவரை மாவட்டத்திற்குள் அனுமதிக்கவில்லை. பெண் போலீசார் சுற்றி வளைத்தனர். இந்நேரத்தில் போலீசாருடன் பிரியங்கா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

"मैं उन किसानों से महत्वपूर्ण नहीं हूं, जिनको तुमने मारा है।"@priyankagandhi जी के ये भाव बता रहे हैं कि वो किस दर्द और पीड़ा के साथ किसानों से जुड़ी हुई है और रातभर सड़कों पर उतरी है।
न्याय तो अब होकर रहेगा जोगी जी...#PriyankaGandhiwithFarmers#लखीमपुर_किसान_नरसंहार pic.twitter.com/nc45BN9D9S

— Congress (@INCIndia) October 4, 2021கொலை வழக்குப்பதிவு


வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார். இதன்படி விபத்தை ஏற்படுத்திய அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.


அகிலேசுக்கு வீட்டுக்காவல் ?


சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வீட்டின் அருகே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவரை வெளியே வர விடாமல் போலீசார் வீட்டுக்காவலில் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
04-அக்-202115:22:36 IST Report Abuse
Vena Suna பிரச்சினைகளை பெரிதாக்குவதால் இனி இவருக்கு "பிரச்சினை பிரியங்கா" என்ற பெயர் வைக்கப் படும்.
Rate this:
Cancel
GANESUN - Delhi,இந்தியா
04-அக்-202115:10:33 IST Report Abuse
GANESUN சிந்து: அக்கா இப்போ நிலவரம் சரியாயிடிச்சு எல்லோரும் நம்ப கட்சி பாஞ்சாப் பிராபளத்த மறந்துட்டாங்க..நீங்களும் அண்ணனும் கில்லாடிங்க அதுதான் உங்க கூடவே இருப்பேன்னேன்.
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
04-அக்-202115:01:07 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் புரிந்து கொள்ளக்கூடியதே அதிகாரத்தில் இல்லாததால் குடும்பம் பல ஆண்டுகளாக மரியாதை இழந்து தவிக்கிறது கட்சியிலும் மரியாதை இல்லை அதன் காரணமாகவும், இந்த வயதிற்கே உரிய சில பர்சனல் பிரச்னைகள் காரணமாகவும் மனச்சிதைவு ஏற்பட்டிருக்கலாம் பாவம் ட்ரீட்மெண்ட் உடனடித் தேவை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X