சம்பவம் செய்தி

தமிழ்நாடு

60 விவசாயிகள் மீது வழக்கு

Added : அக் 04, 2021
Share
Advertisement
திருப்பூர்:வெள்ளகோவில் கிளை வாய்க்காலில் நான்காம் மண்டலம் நீர் பங்கீட்டு பணிகள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் காங்கயத்தில் பி.ஏ.பி., உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் கடந்த ஆக., 31ம் தேதி நடந்தது.இதில், உடன்பாடு ஏற்படாத நிலையில், உடுமலை பி.ஏ.பி., செயற்பொறியாளர் கோபி, காங்கயம் செயற்பொறியாளர் அசோக்பாபு ஆகியோரை பாசன

திருப்பூர்:வெள்ளகோவில் கிளை வாய்க்காலில் நான்காம் மண்டலம் நீர் பங்கீட்டு பணிகள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் காங்கயத்தில் பி.ஏ.பி., உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் கடந்த ஆக., 31ம் தேதி நடந்தது.இதில், உடன்பாடு ஏற்படாத நிலையில், உடுமலை பி.ஏ.பி., செயற்பொறியாளர் கோபி, காங்கயம் செயற்பொறியாளர் அசோக்பாபு ஆகியோரை பாசன விவசாயிகள் சிறைபிடித்து போராட்டம் செய்தனர்.தங்களுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க வேண்டும். குளறுபடிகளை கலைந்து, தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.இச்சூழலில், காங்கயம் பி.ஏ.பி., உதவி செயற்பொறியாளர் அசோக்பாபு அளித்த புகாரின் பேரில், பணி செய்ய விடாமல் அலுவலகத்திலேயே சிறைபிடித்து அத்துமீறி நடந்து கொண்டது, அனுமதியின்றி அலுவலக வளாகத்தில் சாமியானா பந்தல் அமைத்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தியது உள்ளிட்ட காரணங்கள் தொடர்பாக, விவசாயிகள், 60 பேர் மீது காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X