இலக்கு எட்ட முடியாத மெகா தடுப்பூசி முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இலக்கு எட்ட முடியாத மெகா தடுப்பூசி முகாம்

Added : அக் 04, 2021
Share
கோவை:கோவை மாவட்டத்தில் நேற்று நடந்த நான்காவது மெகா தடுப்பூசி முகாமில், 81,454 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.கொரோனா இரண்டாம் அலையில் கடுமையாக பாதிக்கப்பட்ட கோவை மாவட்டத்தில், தடுப்பூசி முகாம்கள் அதிக எண்ணிக்கையில் நடத்தப்படுகின்றன.நேற்று நான்காம் முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகள் என மொத்தம் 558

கோவை:கோவை மாவட்டத்தில் நேற்று நடந்த நான்காவது மெகா தடுப்பூசி முகாமில், 81,454 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.கொரோனா இரண்டாம் அலையில் கடுமையாக பாதிக்கப்பட்ட கோவை மாவட்டத்தில், தடுப்பூசி முகாம்கள் அதிக எண்ணிக்கையில் நடத்தப்படுகின்றன.நேற்று நான்காம் முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகள் என மொத்தம் 558 இடங்களில் முகாம்கள் நடந்தன.அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், 24 மணி நேரமும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டது. கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முகாம்களை பார்வையிட்டனர்.'போதுமான எண்ணிக்கையில் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதால், இந்த முகாமில் 1.50 லட்சம் பேர் என்ற இலக்கை எளிதில் எட்டி விடலாம்' என்று மாவட்ட கலெக்டரும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.ஆனால் நேற்று இரவு நிலவரப்படி, 81,454 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். 31,871 பேர் முதல் தவணையும், 49,583 பேர் இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X