பொது செய்தி

தமிழ்நாடு

நாற்று நடுவதற்கு சாலை தயார்!

Added : அக் 04, 2021
Share
Advertisement
பல்லடம்:பல்லடம் அடுத்த, கரடிவாவி - - அனுப்பட்டி செல்லும் ரோட்டில், ஏராளமான குடியிருப்புகள், தொழிற்சாலைகள், விவசாய நிலங்கள் உள்ளிட்டவை உள்ளன. கிராம மக்கள் பலர் இந்த ரோட்டை பயன்படுத்தி வருகின்றனர்.அனுப்பட்டி செல்லும் பிரிவில், ரோடு சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக, பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதுடன், ரோடு சேறும் சகதியுமாக
 நாற்று நடுவதற்கு சாலை தயார்!

பல்லடம்:பல்லடம் அடுத்த, கரடிவாவி - - அனுப்பட்டி செல்லும் ரோட்டில், ஏராளமான குடியிருப்புகள், தொழிற்சாலைகள், விவசாய நிலங்கள் உள்ளிட்டவை உள்ளன. கிராம மக்கள் பலர் இந்த ரோட்டை பயன்படுத்தி வருகின்றனர்.அனுப்பட்டி செல்லும் பிரிவில், ரோடு சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக, பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதுடன், ரோடு சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.பொதுமக்கள் கூறுகையில், 'அனுப்பட்டி, புளியம்பட்டி, பொள்ளாச்சி செல்லும் ரோட்டை இணைப்பதால், கிராம மக்கள் பலர் இந்த ரோட்டை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக விவசாய தொழில் சார்ந்த வாகனங்கள், அதிக அளவில் இவ்வழியே செல்கின்றன.அனுப்பட்டி பிரிவு அருகே, ரோட்டில் உள்ள பள்ளம் நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது. கடந்த சில தினங்களாக பெய்த மழையில், ரோடு முழுவதும் சேறும் சகதியும் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் பலர் தத்தளித்து செல்கின்றனர்.டூவீலருடன் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. ரோட்டை உடனடியாகப் புதுப்பிக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X