காங்., நிர்வாகி வீட்டில் 15 சவரன் நகை திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காங்., நிர்வாகி வீட்டில் 15 சவரன் நகை திருட்டு

Added : அக் 04, 2021
Share
திருப்பூர்:மங்கலம், சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் சபா துரைசாமி, 54. ஓ.இ., மில் நடத்தி வருகிறார். மங்கலம் பகுதி காங்கிரஸ் கட்சியின் கிளை செயலாளராகவும் உள்ளார்.நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு, சூலுாரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின், நேற்று மாலை வீட்டுக்கு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து

திருப்பூர்:மங்கலம், சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் சபா துரைசாமி, 54. ஓ.இ., மில் நடத்தி வருகிறார். மங்கலம் பகுதி காங்கிரஸ் கட்சியின் கிளை செயலாளராகவும் உள்ளார்.நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு, சூலுாரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின், நேற்று மாலை வீட்டுக்கு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த, தங்க நாணயம், மோதிரம், கம்மல் உட்பட, 15 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X