பொது செய்தி

தமிழ்நாடு

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி அளவு ஆண்டிற்கு 100 கோடி டன்னாக நிர்ணயம்: என்.எல்.சி.,சேர்மன் ராகேஷ்குமார் தகவல்

Added : அக் 04, 2021
Share
Advertisement
நெய்வேலி:இந்திய நிலக்கரித்துறை அமைச்சகம் நாட்டின் நிலக்கரி உற்பத்தி அளவை ஆண்டிற்கு 100 கோடி டன்னாக நிர்ணயித்திருப்பதாக என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் சேர்மன் ராகேஷ்குமார் பேசினார்.கடலுார் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி.,இந்தியா நிறுவனத்தின் சார்பில் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. என்.எல்.சி.,மனிதவளத்துறை மற்றும் சுரங்கத் துறை இயக்குனர் விக்ரமன் தலைமை
 இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி அளவு  ஆண்டிற்கு 100 கோடி டன்னாக நிர்ணயம்: என்.எல்.சி.,சேர்மன் ராகேஷ்குமார் தகவல்

நெய்வேலி:இந்திய நிலக்கரித்துறை அமைச்சகம் நாட்டின் நிலக்கரி உற்பத்தி அளவை ஆண்டிற்கு 100 கோடி டன்னாக நிர்ணயித்திருப்பதாக என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் சேர்மன் ராகேஷ்குமார் பேசினார்.கடலுார் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி.,இந்தியா நிறுவனத்தின் சார்பில் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. என்.எல்.சி.,மனிதவளத்துறை மற்றும் சுரங்கத் துறை இயக்குனர் விக்ரமன் தலைமை தாங்கினார். நிதித்துறை மற்றும் செயலாக்கத்துறை இயக்குனர் ஜெய்குமார் சீனிவாசன், மின்துறை இயக்குனர் ஷாஜிஜான், என்.எல்.சி.,ஒற்றாடல் துறையின் முதன்மை கண்காணிப்பு அதிகாரி சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். செயல் இயக்குனர் சதீஷ்பாபு வரவேற்றார்.காந்தி சிலைக்கு மாலையணிவித்து என்.எல்.சி.,இந்தியா நிறுவனத்தின் சேர்மன் ராகேஷ்குமார் பேசியதாவது:இந்தியாவின் மேம்பாட்டிற்கு தேவையான மின்சக்தியை பிறநாடுகளின் உதவியின்றி உற்பத்தி செய்து, மெத்தனால் இறக்குமதியைத் தவிர்க்க என்.எல்.சி.,இந்தியா நிறுவனம் வழி வகுத்து வருகிறது. பிரதமர் மோடி 2014ம் ஆண்டு துவக்கி வைத்த துாய்மை இந்தியா திட்டத்தில், என்.எல்.சி., இந்தியா நிறுவனம் முழுமையாக இணைத்து முழுவீச்சில் பணிகளை செய்து வருகிறது. தமிழகம் மற்றும் ராஜஸ்தான் மாநில பள்ளிகளில் மட்டுமின்றி, தமிழகம் மற்றும் உ.பி.,யின் ரயில் நிலையங்களிலும் நவீனக் கழிவறைகள் கட்டித் தந்துள்ளோம்.மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதை தவிர்க்கும் முயற்சி, சுயசார்பு பாரதத்திற்கான மிகப்பெரிய செயல்பாடாகும். இந்திய நிலக்கரித் துறை அமைச்சகம் நாட்டின் நிலக்கரி உற்பத்தி அளவை ஆண்டிற்கு 100 கோடி டன்னாக நிர்ணயித்து உள்ளது. என்.எல்.சி., இந்தியா நிறுவனம் தனது புதிய முயற்சியாக பழுப்பு நிலக்கரியிலிருந்து மெத்தனால் எனப்படும் ரசாயன டீசலை உருவாக்கும் ஆராய்ச்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. நாட்டின் தேவையில் 85 சதவீதம் எத்தனால் இனி பழுப்பு நிலக்கரியிலிருந்து பெறப்படும்.நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி எடுக்க, சுரங்கம் வெட்டும் போது கிடைக்கும் மேல் மண்ணை சில மாற்றங்கள் செய்து கட்டுமானத்திற்கு பயன்படும் மணலாக மாற்றும் பணியை செய்து வருகிறது. இவ்வாறு சேர்மன் ராகேஷ்குமார் பேசினார்.நிகழ்ச்சியில் என்.எல்.சி.,திட்டம் மற்றும் செயலாக்கத் துறை இயக்குனர் மோகன், முதன்மை பொது மேலாளர்கள் ஜோஸ்டீபன் டோமினிக், தியாகராஜூ, பெருமாள் சாமி, மக்கள் தொடர்புத் துறை முதன்மை பொது மேலாளர் சத்தியமூர்த்தி, பொது மேலாளர் சொக்கலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X