மாஜி அமைச்சர் மீது போலீசார் வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாஜி அமைச்சர் மீது போலீசார் வழக்கு

Added : அக் 04, 2021
Share
கரூர்:கரூரில், டிரஸ்ட் ஆண்டு விழா கொண்டாடிய முன்னாள் அமைச்சர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தமிழக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர். இவர், நேற்று முன்தினம் கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, மனோகரா கார்னர் பகுதியில், எம்.ஆர்.வி., டிரஸ்டின் மூன்றாவது ஆண்டு விழாவையொட்டி, பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி கொண்டாடினார்.ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள

கரூர்:கரூரில், டிரஸ்ட் ஆண்டு விழா கொண்டாடிய முன்னாள் அமைச்சர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தமிழக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர். இவர், நேற்று முன்தினம் கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, மனோகரா கார்னர் பகுதியில், எம்.ஆர்.வி., டிரஸ்டின் மூன்றாவது ஆண்டு விழாவையொட்டி, பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி கொண்டாடினார்.ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சமூக இடைவெளியை பின்பற்றாமல், விழா கொண்டாடியதாக வி.ஏ.ஓ., சுகுணா, போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, கரூர் டவுன் போலீசார், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X