உடுமலை;உடுமலையில், தி.மு.க.,வினர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டதால், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சித்தலைவராக, தி.மு.க., வைச்சேர்ந்த காமாட்சி உள்ளார். அவரது கணவர் அய்யாவு. நேற்று முன்தினம் கிராம சபை கூட்டம் முடிந்தவுடன், அப்பகுதியில், சோலார் மின் விளக்கை கழற்ற முயற்சித்த நபரிடம் அய்யாவு, யார் என கேட்டுள்ளார்.அப்போது, தி.மு.க.,வில் மற்றொரு கோஷ்டியைச்சேர்ந்த லோகநாதன், 'யார் கேட்பது' என கூறி திட்டியதாகவும், இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாக, அய்யாவு, 44, நாகராஜ், 28 மற்றும் எதிர்தரப்பைச்சேர்ந்த, லோகநாதன்,69, மீது உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.உடுமலை போலீஸ் ஸ்டேஷனில் பேச்சு நடந்தபோது, அங்கு வந்த இந்திய கம்யூ., மாவட்டக் குழு உறுப்பினர் சவுந்தரராஜனை, போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகிலேயே, அய்யாவுவின் தம்பி, அரசகாளை மற்றும் ஜோதி ஆகியோர் தாக்கியுள்ளனர்.காயமடைந்த சவுந்தரராஜன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE