அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி முதற்கட்ட தேர்தல் பிரசாரம்: இன்றுடன் நிறைவு

Added : அக் 04, 2021
Share
Advertisement
சென்னை:காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில், வரும் 6 மற்றும் 9ம் தேதிகளில், இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.அத்துடன், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. ஒன்பது மாவட்டங்களில் 23 ஆயிரத்து 998 பதவிகளை கைப்பற்ற, 79 ஆயிரத்து 433

சென்னை:காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில், வரும் 6 மற்றும் 9ம் தேதிகளில், இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.அத்துடன், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. ஒன்பது மாவட்டங்களில் 23 ஆயிரத்து 998 பதவிகளை கைப்பற்ற, 79 ஆயிரத்து 433 பேர் களத்தில் உள்ளனர்.இந்நிலையில், முதற்கட்டமாக, ௬ம் தேதி தேர்தல் நடக்கவுள்ள பகுதிகளில், இன்று மாலை 5:௦௦ மணியுடன் பிரசாரம் முடிகிறது. அதன்பின், சம்மந்தப்பட்ட உள்ளாட்சிகளுக்கு தொடர்பில்லாத நபர்கள் வெளியேற, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இன்று காலை 10:௦௦ மணி முதல் 6ம்தேதி நள்ளிரவு 12:௦௦ மணிவரை டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார்களை திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X