பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் 74.23 சதவீதம்; பழங்குடியினருக்கு தடுப்பூசி

Added : அக் 04, 2021
Share
Advertisement
கோவை:மலைவாழ் பகுதிகளில், 74.23 சதவீதம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.கோவை மாவட்டத்தில், மலை கிராமங்களில் சுகாதாரத் துறை சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதுவரை, 117 கிராமங்களை சேர்ந்த, 15 ஆயிரத்து, 788 பேர் முதல் தவணை, 6,843 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியது தெரியவந்துள்ளது.கோவை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர்

கோவை:மலைவாழ் பகுதிகளில், 74.23 சதவீதம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.கோவை மாவட்டத்தில், மலை கிராமங்களில் சுகாதாரத் துறை சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதுவரை, 117 கிராமங்களை சேர்ந்த, 15 ஆயிரத்து, 788 பேர் முதல் தவணை, 6,843 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியது தெரியவந்துள்ளது.கோவை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அருணா கூறுகையில்,''துவக்கத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள பழங்குடி மக்களிடம் தயக்கம் இருந்தது. விழிப்புணர்வுக்கு பின், அவர்கள் தடுப்பூசி செலுத்த துவங்கினர். இதுவரை, 74.23 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X