பொது செய்தி

தமிழ்நாடு

'தினமலர்' செய்தி எதிரொலி: காந்தி படங்களை புதுப்பிக்க கோவை கலெக்டர் அறிவுரை

Added : அக் 04, 2021
Share
Advertisement
கோவை;நமது நாளிதழில் வந்த செய்தியின் எதிரொலியாக, கோவை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் புகைப்படங்களைப் புதுப்பிக்க கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். கோவை அவிநாசி ரோடு மேம்பாலம் அருகில் அரசு காதிகிராப்ட் கட்டடத்தின் ஒரு பகுதியில் காந்தி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. 1973ம் ஆண்டில் திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், தற்போது முறையான பராமரிப்பின்றி, படங்கள்

கோவை;நமது நாளிதழில் வந்த செய்தியின் எதிரொலியாக, கோவை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் புகைப்படங்களைப் புதுப்பிக்க கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். கோவை அவிநாசி ரோடு மேம்பாலம் அருகில் அரசு காதிகிராப்ட் கட்டடத்தின் ஒரு பகுதியில் காந்தி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. 1973ம் ஆண்டில் திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், தற்போது முறையான பராமரிப்பின்றி, படங்கள் பழுப்பேறி, அரித்து, அழிந்து வரும் நிலையில் உள்ளன.
இதுகுறித்து நமது நாளிதழில் செய்தியும், படமும் நேற்று வெளியானது. இதன் எதிரொலியாக, இந்த அருங்காட்சியகத்தையும், அதிலுள்ள காந்தியின் புகைப்படங்களையும் புதுப்பிக்குமாறு காதிகிராப்ட் உதவி இயக்குனருக்கும், அருங்காட்சியாகப் பொறுப்பாளருக்கும் கோவை கலெக்டர் சமீரன் அறிவுறுத்தியுள்ளார்.
பி.ஆர்.ஓ,, செந்தில் அண்ணா கூறுகையில், ''காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள புகைப்படங்களைப் புதுப்பிக்க கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். பள்ளி மாணவ, மாணவியரை அழைத்து வருவதற்கும் ஏற்பாடு செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார். பன்மொழிகளைக் கற்ற ஒருவரை, அந்த புகைப்படக் கண்காட்சியகத்தில் பணியமர்த்தி பார்வையாளர்களுக்கு விளக்க வேண்டுமென்றும் அவர் ஆலோசனையும் தெரிவித்துள்ளார்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X