பொது செய்தி

தமிழ்நாடு

முள் இல்லா பீமா மூங்கிலால் 100 ஆண்டுகளுக்கு வருவாய்!

Added : அக் 04, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:''முள்ளில்லா பீமா மூங்கில் வளர்த்தால், தொடர்ந்து 100 ஆண்டுகளுக்கு வருவாய் கிடைக்கும்,'' என, மூங்கில் விஞ்ஞானி பாரதி தெரிவித்தார்.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், 'சாரதா டெர்ரி புராடக்ட்ஸ்' கம்பெனி, 'குரோம்மோர் பையோடெக்' நிறுவனம் இணைந்து, முள்ளில்லா பீமா மூங்கில் சாகுபடி குறித்த கருத்தரங்கம் நடந்தது. மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி மற்றும்
 முள் இல்லா பீமா மூங்கிலால் 100 ஆண்டுகளுக்கு வருவாய்!

மேட்டுப்பாளையம்:''முள்ளில்லா பீமா மூங்கில் வளர்த்தால், தொடர்ந்து 100 ஆண்டுகளுக்கு வருவாய் கிடைக்கும்,'' என, மூங்கில் விஞ்ஞானி பாரதி தெரிவித்தார்.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், 'சாரதா டெர்ரி புராடக்ட்ஸ்' கம்பெனி, 'குரோம்மோர் பையோடெக்' நிறுவனம் இணைந்து, முள்ளில்லா பீமா மூங்கில் சாகுபடி குறித்த கருத்தரங்கம் நடந்தது. மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் பார்த்திபன் முன்னிலை வகித்தார்.குரோம்மோர் பையோடெக் நிறுவன இயக்குனரும், மூங்கில் விஞ்ஞானியுமான பாரதி பேசியதாவது:கடந்த 15 ஆண்டுகளாக, முள்ளில்லா பீமா மூங்கில் நாற்றை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வழங்கியும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும் வருகிறோம். இது ஒரு பணப் பயிர். இது நன்கு வளர்ந்த பின், அறுவடை செய்ய வனத்துறையின் கட்டுப்பாடு இல்லை.நாற்று நட்டது முதல், இரண்டரை ஆண்டுகளுக்கு பின், அறுவடை செய்யலாம். ஒவ்வொரு ஆண்டும், தொடர்ந்து அறுவடை செய்து கொண்டே இருக்கலாம். ஒரு முறை நடவு செய்தால் தொடர்ந்து, 100 ஆண்டுகளுக்கு அறுவடை செய்து கொண்டே இருக்கலாம். ஒரு ஏக்கரில், ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும்.இயற்கை சீற்றத்தால் பாதிப்பு ஏதும் ஏற்படாது. பராமரிப்பு செலவும் குறைவு. சொட்டு நீர் பாசன முறையில் பயிர் செய்தால், அதிக மகசூல் பெறலாம். ஒரு பீமா மூங்கில் செடி ஆண்டுக்கு, 450 கிலோ கார்பன்டை ஆக்சைடு எடுத்து, 300 கிலோ ஆக்சிஜன் வெளியிடுகிறது. இது சுற்று சூழலை பாதுகாக்கிறது.வருங்காலத்தில் மூங்கிலில் இருந்து, மின்சாரம், பெட்ரோல், டீசல், சிமென்ட் உற்பத்தி செய்யவும், சர்க்கரை ஆலைக்கும், மூங்கில் ஒரு மாற்றுப் பயிராக விளங்கும். உரம் மற்றும் தண்ணீர் சீரான முறையில் பாய்ச்சினால், ஒரு ஆண்டுக்கு ஒரு ஏக்கருக்கு, 40 டன் மூங்கில் மகசூல் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த, 'சாரதா டெர்ரி' நிறுவன சேர்மன் கண்ணப்பன் பேசுகையில், ''இப்பகுதிகளில் மூங்கில் வளர்ப்பதை ஊக்குவிக்க, 100 விவசாயிகளுக்கு தலா, 50 ஆயிரம் வீதம், 50 லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்,'' என்றார்.'என்குரோ கார்பன்' எரிசக்தி நிறுவன இயக்குனர் பரத்ராஜ் செந்தில், சாரதா டெர்ரி நிறுவன இயக்குனர் விக்ரம் கிருஷ்ணா, பத்மஸ்ரீ விருதுபெற்ற இயற்கை விவசாயி பாப்பம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X