பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் தொடர்மழை: 10 பேருக்கு வைரஸ் காய்ச்சல்

Added : அக் 04, 2021
Share
Advertisement
ஈரோடு: தொடர்மழையால், 10 பேருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக, சுகாதாரதுறையினர் கூறினர். ஈரோடு மாவட்டத்தில், சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மாவட்டத்தில் பெருந்துறை, சென்னிமலை, கொளாநல்லி பகுதிகளில், 10 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசு, தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று

ஈரோடு: தொடர்மழையால், 10 பேருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக, சுகாதாரதுறையினர் கூறினர். ஈரோடு மாவட்டத்தில், சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மாவட்டத்தில் பெருந்துறை, சென்னிமலை, கொளாநல்லி பகுதிகளில், 10 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசு, தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரத்த பரிசோதனை முடிவு வந்த பிறகே, எந்த வகையான காய்ச்சல் என தெரியவரும். தண்ணீரை சுட வைத்து குடிக்க வேண்டும். வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என, சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X