1,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்: பலத்த காற்றால் விவசாயிகள் சோகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

1,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்: பலத்த காற்றால் விவசாயிகள் சோகம்

Added : அக் 04, 2021
Share
பு.புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு, பலத்த காற்றுடன் விடிய விடிய மழை பெய்தது. இதில் காற்றை தாக்குப் பிடிக்க முடியாமல், சொலவனூர், பனையம்பள்ளி கிராமத்தில், அறுவடைக்கு தயாராக இருந்த, நாட்டு நேந்திரன், குவின்டால் நேந்திரன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாருடன் முறிந்து விழுந்தன. கனகராஜ் தோட்டத்தில், 800

பு.புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு, பலத்த காற்றுடன் விடிய விடிய மழை பெய்தது. இதில் காற்றை தாக்குப் பிடிக்க முடியாமல், சொலவனூர், பனையம்பள்ளி கிராமத்தில், அறுவடைக்கு தயாராக இருந்த, நாட்டு நேந்திரன், குவின்டால் நேந்திரன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாருடன் முறிந்து விழுந்தன. கனகராஜ் தோட்டத்தில், 800 வாழை மரங்கள், திருமலைசாமி தோட்டத்தில், 200 வாழை மரங்கள் அடியோடு சேதமானது. வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


விடியவிடிய மழை: சத்தி, பவானிசாகர் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு, இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. விடிய விடிய பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பவானிசாகரில், 38.6 மி.மீ., மழை பதிவானது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X