பொது செய்தி

தமிழ்நாடு

உழவர் சந்தைக்கு புதிய அடையாள அட்டை: விண்ணப்பிக்க அழைப்பு

Added : அக் 04, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் மாநகரில் சம்பத் நகர், பெரியார் நகர், கோபி, சத்தி, பெருந்துறை என, ஐந்து இடங்களில் உழவர் சந்தைகளில், காய்கறி விற்பனை செய்ய, புதிய அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம். உழவர் சந்தையில் விளை பொருளை நேரடியாக விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள், ஏற்கனவே அடையாள அட்டை பெற்று விற்பனை செய்வோர், தங்கள் விளை நிலத்தின் சிட்டா அடங்கல், கணினி வழி சிட்டா, வி.ஏ.ஓ.,

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் மாநகரில் சம்பத் நகர், பெரியார் நகர், கோபி, சத்தி, பெருந்துறை என, ஐந்து இடங்களில் உழவர் சந்தைகளில், காய்கறி விற்பனை செய்ய, புதிய அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம். உழவர் சந்தையில் விளை பொருளை நேரடியாக விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள், ஏற்கனவே அடையாள அட்டை பெற்று விற்பனை செய்வோர், தங்கள் விளை நிலத்தின் சிட்டா அடங்கல், கணினி வழி சிட்டா, வி.ஏ.ஓ., சான்று, ரேஷன் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், விவசாயி மற்றும் அவரது குடும்பத்தாரின் பாஸ்போர்ட் மற்றும் ஸ்டாம்ப் அளவு புகைப்படம் தலா, 3 ஆகியவற்றை உழவர் சந்தை அலுவலகத்தில் வழங்க வேண்டும். அங்கு விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். உழவர் சந்தை அனுமதி பெற்று செயல்படும் மகளிர் குழு, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்கள் பதிவு சான்று நகலை புதுப்பிக்கப்பட்ட விபரம், உறுப்பினர் முகவரியை சம்மந்தப்பட்ட உழவர் சந்தை நிர்வாக அலுவலரிடம் வழங்க வேண்டும். இத்தகவலை வேளாண் வணிக துணை இயக்குனர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X