பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய அமைப்பு சாரா தொழிலாளர் விபரம் தேசிய தரவு தளத்தில் பதிவு

Added : அக் 04, 2021
Share
Advertisement
ஈரோடு: மத்திய அமைப்பு சாரா தொழிலாளர்களின் விபரங்களை, ஒருங்கிணைக்க உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, அமைப்பு சாரா தொழிலாளர்களின் (e-SHRAM/NDUW) என்ற தேசிய தரவு தளத்தை உருவாக்கி உள்ளது. மேலும் https://eshram.gov.in என்ற வலை தளம் மூலம் கட்டுமான தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டு பணியாளர்கள், விவசாய தொழிலாளர்கள், குத்தகைதாரர்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் என, 156 வகை

ஈரோடு: மத்திய அமைப்பு சாரா தொழிலாளர்களின் விபரங்களை, ஒருங்கிணைக்க உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, அமைப்பு சாரா தொழிலாளர்களின் (e-SHRAM/NDUW) என்ற தேசிய தரவு தளத்தை உருவாக்கி உள்ளது. மேலும் https://eshram.gov.in என்ற வலை தளம் மூலம் கட்டுமான தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டு பணியாளர்கள், விவசாய தொழிலாளர்கள், குத்தகைதாரர்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் என, 156 வகை அமைப்பு சாரா தொழிலாளர்கள், தங்கள் விபரங்களை பொது சேவை மையம் மூலம் பதிவு செய்யலாம். 16 முதல், 59 வயதுக்குள்ளவர்கள், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும். இப்பதிவு செய்வோருக்கு யூ.ஏ.என்., என்ற, 12 இலக்க எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும். இப்பதிவு செய்தோருக்கு விபத்து காப்பீடாக, இரண்டு லட்சம் ரூபாய், விபத்து ஊனத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X