பொது செய்தி

தமிழ்நாடு

சிப்காட்டால் பாதிக்கப்பட்டோர் கோரிக்கை மாநாடு நடத்த முடிவு

Added : அக் 04, 2021
Share
Advertisement
பெருந்துறை: பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்க ஆலோசனை கூட்டம், பெருந்துறையில் நேற்று நடந்தது. ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் சென்னியப்பன் தலைமை வகித்தார். சிப்காட்டுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட, 200 ஏக்கருக்குரிய இழப்பீட்டு தொகை, 25 ஆண்டுகளாகியும் விவசாயிகளுக்கு கிடைக்காமல் உள்ளது. இதை உடனடியாக வழங்க வேண்டும். சிப்காட்டில் சட்டவிரோதமாக

பெருந்துறை: பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்க ஆலோசனை கூட்டம், பெருந்துறையில் நேற்று நடந்தது. ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் சென்னியப்பன் தலைமை வகித்தார். சிப்காட்டுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட, 200 ஏக்கருக்குரிய இழப்பீட்டு தொகை, 25 ஆண்டுகளாகியும் விவசாயிகளுக்கு கிடைக்காமல் உள்ளது. இதை உடனடியாக வழங்க வேண்டும். சிப்காட்டில் சட்டவிரோதமாக செயல்பட்டு நிலம், நீர், காற்றை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலத்தடி நீர் மாசடைந்த சுற்றுவட்டார கிராமங்களுக்கு, பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அடுத்த மாதம் கோரிக்கை மாநாடு நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் சிப்காட்டில் உள்ள ஜே.எஸ்.ஆட்டோ காஸ்ட் பவுண்டரி, வார்ப்பு இரும்பு தொழிற்சாலை விரிவாக்கம் தொடர்பாக, வரும், 18ம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடக்கிறது. இதில் மக்கள் நலச்சங்கத்தினர் திரளாக பங்கேற்று, கருத்துக்களை முன் வைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X