சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கிய மருமகளை காப்பாற்ற முயன்ற மாமியார் பலி

Added : அக் 04, 2021
Share
Advertisement
கோபி: கோபி அருகே மின்சாரம் தாக்கிய மருமகளை காப்பாற்ற முயன்ற மாமியார் பலியானது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டம் கோபி, கரட்டடிபாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம், 45; ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரின் மனைவி தமிழரசி, 30; இவர்களின் மகள்கள் வைஷ்ணவி, 11; மெய்நவீ, 8; நேற்று மதியம், 1:00 மணிக்கு துவைத்த துணிகளை, தமிழரசி கம்பியில் காய போட்டார். அப்போது மின் கசிவால் கம்பியில்

கோபி: கோபி அருகே மின்சாரம் தாக்கிய மருமகளை காப்பாற்ற முயன்ற மாமியார் பலியானது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டம் கோபி, கரட்டடிபாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம், 45; ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரின் மனைவி தமிழரசி, 30; இவர்களின் மகள்கள் வைஷ்ணவி, 11; மெய்நவீ, 8; நேற்று மதியம், 1:00 மணிக்கு துவைத்த துணிகளை, தமிழரசி கம்பியில் காய போட்டார். அப்போது மின் கசிவால் கம்பியில் பாய்ந்து கொண்டிருந்த மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். இதைக்கண்ட மகள்கள், மாமியார் பாப்பாத்தி, 65, தமிழரசியை காப்பாற்ற முயன்றனர். அவர்களும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் செல்லும் வழியில், பாப்பாத்தி இறந்தார். மற்ற மூவரும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். வெங்கடாசலம் புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X