சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெருந்துறை, கோபியை கலக்கிய திருடன் கைது; 54 பவுன் மீட்பு

Added : அக் 04, 2021
Share
Advertisement
ஈரோடு: பெருந்துறை, கோபி பகுதியில் திருட்டில் ஈடுபட்ட களவாணியை, கைது செய்த போலீசார், 54 பவுன் நகையை மீட்டனர். பெருந்துறை இன்ஸ்பெக்டர் தலைமையில், தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். காரில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரித்தனர். கோவை, ஆலாந்துறை, மங்களாபாளையத்தை சேர்ந்த வினோத்குமார், 55, என தெரிந்தது. தீவிர விசாரணையில் பெருந்துறை, காஞ்சிகோவில், மலையம்பாளையம் மற்றும்

ஈரோடு: பெருந்துறை, கோபி பகுதியில் திருட்டில் ஈடுபட்ட களவாணியை, கைது செய்த போலீசார், 54 பவுன் நகையை மீட்டனர். பெருந்துறை இன்ஸ்பெக்டர் தலைமையில், தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். காரில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரித்தனர். கோவை, ஆலாந்துறை, மங்களாபாளையத்தை சேர்ந்த வினோத்குமார், 55, என தெரிந்தது. தீவிர விசாரணையில் பெருந்துறை, காஞ்சிகோவில், மலையம்பாளையம் மற்றும் கோபி போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில், திருட்டில் ஈடுபட்டது உறுதியானது. அவனிடம், 54 பவுன் நகைகளை மீட்டனர். கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காரை பறிமுதல் செய்தனர். மாவட்டத்தில் இந்தாண்டு இதுவரை, 275 திருட்டு, வழிப்பறி நடந்துள்ளது. இதில், 178 வழக்குகளில், 240 பவுன் மீட்கப்பட்டுள்ளதாக, மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X