பொது செய்தி

தமிழ்நாடு

"காமராஜர் பெயரை சொல்லியே எத்தனை காலத்திற்கு தான் அரசியல் செய்வீர்கள்..."

Updated : அக் 04, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
காங்., முன்னாள் மாநில தலைவர் இளங்கோவன் பேச்சு:காமராஜர் தான் இன்றும் தமிழகத்துக்கு வழிகாட்டியாக உள்ளார். காங்., ஆட்சி செய்யவில்லை என்றாலும், காமராஜர் வழியில் தான், ஆட்சி நடத்துவதாக பலர் சொல்லும் அளவுக்கு, அவரது ஆட்சி இன்றும் பேசப்படுகிறது. இந்தியாவில் முன்னேறிய மாநிலமாக தமிழகம் விளங்குவதற்கு காரணம், காமராஜர் என்பதை மறந்து விடக்கூடாது.காமராஜர் பெயரை சொல்லியே
பேச்சு_பேட்டி_அறிக்கை, காங்கிரஸ், இளங்கோவன், காமராஜர்

காங்., முன்னாள் மாநில தலைவர் இளங்கோவன் பேச்சு:
காமராஜர் தான் இன்றும் தமிழகத்துக்கு வழிகாட்டியாக உள்ளார். காங்., ஆட்சி செய்யவில்லை என்றாலும், காமராஜர் வழியில் தான், ஆட்சி நடத்துவதாக பலர் சொல்லும் அளவுக்கு, அவரது ஆட்சி இன்றும் பேசப்படுகிறது. இந்தியாவில் முன்னேறிய மாநிலமாக தமிழகம் விளங்குவதற்கு காரணம், காமராஜர் என்பதை மறந்து விடக்கூடாது.


காமராஜர் பெயரை சொல்லியே எத்தனை காலத்திற்கு தான் அரசியல் செய்வீர்கள். அவருக்கு பின் எத்தனையோ மாநிலங்களில் காங்., ஆட்சிக்கு வந்துள்ளது. அங்கு யாருமே தேறவில்லையா?



த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி:
உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், த.மா.கா.., வெற்றி பெறும் இடங்களில் போட்டியிடுகிறது.


அது சரி. இப்போது, வெற்றி, தோல்வியை ஆராய முடியாது. உங்கள் கட்சிக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்கியுள்ளது என்பதை வெளிப்படையாக கூறலாமே. கூட்டணி தர்மத்திற்கு எதிராக அமைந்து விடும் என யோசிக்கிறீர்களோ?



அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:
கூடங்குளத்தில் மேலும் ஓர் அணுக்கழிவு மையம் அமைக்க, மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது கண்டனத்திற்குரியது. இந்த அனுமதியை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அணுக்கழிவு மையம் அமைவதை, தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.


அரசியல் கட்சியை துவக்கி விட்டோம் என ஆளாளுக்கு ஏதாவது சொல்லாதீர்கள்... நாட்டை ஆளும் அரசுக்கு தெரியாதா, மக்களுக்கு எது சாதகம், பாதகம் என்று. அதனால், எல்லா விவகாரங்களையும் அரசியலாக பார்க்காதீர்கள்.



latest tamil news


நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:
ஹிந்து மதத்திற்கும், தமிழுக்கும் சம்பந்தம் இல்லை. சைவத்துக்கும், தமிழுக்கும் தான் சம்பந்தம் இருக்கிறது. இதுபற்றி விவாதிக்க யாரும் என்னுடன் தயாரா?


உங்களுடன் வாதம் செய்ய, இப்போதைய நிலையில் எந்த கட்சியும் தயாராக இல்லை. அந்த அளவுக்கு உங்களின் வாதத் திறமை உள்ளது. அதாவது, முயலுக்கு மூணு கால் என்ற ரீதியில்!



மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை:
குஜராத் மாநிலத்திற்கு மட்டும், மோடி அரசு 2019 - -20 ஆண்டில் 11 ஆயிரத்து, 659 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. 2015--16ம் ஆண்டு தரப்பட்ட நேரடி நிதியை விட 350 சதவீதம் இது உயர்வு. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டப்படி தரவேண்டிய நிதியையே இழுத்தடிக்கும் மோடி அரசு, பா.ஜ., ஆளும் மாநிலங்களுக்கு தாராளம் காட்டுகிறது. இது தான் கூட்டுறவு கூட்டாட்சியா?


இதைப் பற்றி மாநில அரசுகளே கண்டுகொள்ளாமல் உள்ள நிலையில், மாநில அரசியலை சார்ந்து, கொள்கையை மாற்றிக் கொள்ளும் கம்யூ.,க்களுக்கு என்ன கவலை... மாநில அரசுகளை, மத்திய அரசுக்கு எதிராக துாண்டி விடுகிறீர்களா?



தமிழக பா.ஜ., பொறுப்பாளர், சி.டி.ரவி அறிக்கை:
காந்தி ஜெயந்தி மற்றும் லால் பகதுார் சாஸ்திரி பிறந்த நாளில் மட்டும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டதில் சாதனை படைக்கப் பட்டு உள்ளது. 90 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது மாபெரும் சாதனை.


இது, சுகாதாரத் துறையினரின் சாதனையா அல்லது மத்திய, பா.ஜ., அரசின் சாதனையா... எல்லாவற்றையும் மத்திய அரசுக்கு சாதகமாக மாற்றாதீர்கள்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
04-அக்-202120:27:54 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam காமராஜர் அவர்களை இந்திரா காந்தி அவர்கள் ஏற்கனவே ஓரம் கட்டினார். எம்ஜிஆர் அவர்கள்தான் காமராஜரின் மானத்தைக் காப்பாற்றினார். காங்கிரஸும் திமுகவும் கேவலப்படுத்தின.
Rate this:
Cancel
M.S.Jayagopal - Salem,இந்தியா
04-அக்-202118:13:19 IST Report Abuse
M.S.Jayagopal திமுகவினரின் ஆட்சிக்குப்பின் நடந்த தேர்தலின்போது காமராஜரே தன்னால் இனி முன்போல் ஆட்சி செய்ய முடியாது. அந்த அளவிற்கு காங்கிரஸ் கட்சியினரின் குணமே மாறி விட்டது என தெரிவித்துள்ளார்.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
04-அக்-202117:05:50 IST Report Abuse
DVRR காமராஜர் பெயரை சொல்லியே எத்தனை காலத்திற்கு???பின்னே என்ன?? யார் பெயரை சொல்லமுடியும் ?? அவர் ஒருத்தர் தான் கர்மா வீரர் ??? ஊழலற்ற மக்கள் சேவை ஒன்றே அவரின் வாழ்வின் லட்சியமாக செய்தவர்?? மத்ததெல்லாம் தண்டக்கருமாந்திரங்கள் என்று எல்லா காங்கிரஸ் ஆளுங்களுக்கு தெரியுமே??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X