போன், கம்ப்யூட்டர் 'அவுட்': சிறுவலூர் போலீசார் அவதி

Added : அக் 04, 2021
Share
Advertisement
கோபி: இடி விழுந்ததால், சிறுவலூர் போலீஸ் ஸ்டேஷனில், தொலைபேசி, கம்ப்யூட்டர் பழுதானதால், போலீசார் அவதியுறுகின்றனர். கோபி அருகேயுள்ள சிறுவலூர் போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.ஐ., ஒருவர், ஏட்டுகள் பத்து பேர் என, 15க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். கடந்த, 1ம் தேதி இரவு இப்பகுதியில், இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இடி தாக்கியதால் ஸ்டேஷன் பயன்பாட்டில் இருந்த, லேண்ட் லைன் தொலைபேசி,

கோபி: இடி விழுந்ததால், சிறுவலூர் போலீஸ் ஸ்டேஷனில், தொலைபேசி, கம்ப்யூட்டர் பழுதானதால், போலீசார் அவதியுறுகின்றனர். கோபி அருகேயுள்ள சிறுவலூர் போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.ஐ., ஒருவர், ஏட்டுகள் பத்து பேர் என, 15க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். கடந்த, 1ம் தேதி இரவு இப்பகுதியில், இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இடி தாக்கியதால் ஸ்டேஷன் பயன்பாட்டில் இருந்த, லேண்ட் லைன் தொலைபேசி, கம்ப்யூட்டர், மோடம், பிரின்டர் பழுதானது. இதனால் புகார் மனு பெறுவது, கம்ப்யூட்டரில் பதிவது, ரசீது தருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. வழக்கு சார்ந்த விபரங்களை, கையால் எழுதி அனுப்பி அவதியுறுகின்றனர். காந்தி ஜெயந்தி, ஞாயிறு என விடுமுறை நாளால், பி.எஸ்.என்.எல்., பணியாளர்களால் வர முடியவில்லை. இன்று கோளாறை சரி செய்ய வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X