பொது செய்தி

தமிழ்நாடு

'தென்மேற்கு பருவமழை தொடரும்'

Added : அக் 04, 2021
Share
Advertisement
சேலம்: தென்மேற்கு வங்கக்கடல், அதையொட்டியுள்ள தமிழக கடற்பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், பரவலாக மழை பெய்கிறது. குறிப்பாக, சேலத்தில் பகலில், அதிக மேகமூட்டம் காணப்படுவதோடு சாரல் மழை தலைகாட்டுகிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அதிகபட்சம் வீரகனூரில், 29 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. ஏற்காடு, 28, சங்ககிரி, 23.4, பெத்தநாயக்கன்பாளையம், 18, ஆணைமடுவு, 16, இடைப்பாடி, 11, சேலம்,

சேலம்: தென்மேற்கு வங்கக்கடல், அதையொட்டியுள்ள தமிழக கடற்பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், பரவலாக மழை பெய்கிறது. குறிப்பாக, சேலத்தில் பகலில், அதிக மேகமூட்டம் காணப்படுவதோடு சாரல் மழை தலைகாட்டுகிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அதிகபட்சம் வீரகனூரில், 29 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. ஏற்காடு, 28, சங்ககிரி, 23.4, பெத்தநாயக்கன்பாளையம், 18, ஆணைமடுவு, 16, இடைப்பாடி, 11, சேலம், 8.7, காடையாம்பட்டி, 8.6, ஓமலூர், 8.4, தம்மம்பட்டி, 8, ஆத்தூர், 6, கரியகோவில், 5 மி.மீ., மழை பெய்துள்ளது. ஏற்காட்டில் பனிப்பொழிவுடன் குளிரும் வாட்டுகின்றன. கடந்த ஜூன், 1 முதல், செப்., 30 வரை, சேலத்தில் தென்மேற்கு பருவமழை, இயல்பான அளவு, 421 மி.மீ., ஆனால், 503.8 மி.மீ., மழை பெய்துள்ளது. 20 சதவீத மழை அதிகம். இதுகுறித்து, வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், 'தென்மேற்கு பருவமழை முற்றாக முடியாமல் தொடர்கிறது. அது வட கிழக்கு பருவமழையாக மாற, இன்னும், 10 நாளாகும். தமிழகத்தில் பொதுவாக, அக்டோபர் இரண்டாம் வாரத்துக்கு பின்பே, வடகிழக்கு பருவமழை தொடங்கும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X