உள்ளாட்சிக்கு ஓட்டுப்போட 11 ஆவணங்கள் எவை?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சிக்கு ஓட்டுப்போட 11 ஆவணங்கள் எவை?

Added : அக் 04, 2021
Share
சேலம்: சேலம் மாவட்ட, ஊரக உள்ளாட்சியில், 24 பதவி களுக்கு, 91 பேர் போட்டியிடுகின்றனர். அதற்கான ஓட்டுப்பதிவு, 195 ஓட்டுச்சாவடிகளில், வரும், 9ல் நடக்க உள்ளது. ஒரு லட்சத்து, 23 ஆயிரத்து, 147 பேர் ஓட்டுப்போட உள்ளனர். உள்ளாட்சி தேர்தலில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதபட்சத்தில், 11 அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை காட்டி, வாக்காளர் ஓட்டுப்போடலாம் என, ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆதார்

சேலம்: சேலம் மாவட்ட, ஊரக உள்ளாட்சியில், 24 பதவி களுக்கு, 91 பேர் போட்டியிடுகின்றனர். அதற்கான ஓட்டுப்பதிவு, 195 ஓட்டுச்சாவடிகளில், வரும், 9ல் நடக்க உள்ளது. ஒரு லட்சத்து, 23 ஆயிரத்து, 147 பேர் ஓட்டுப்போட உள்ளனர். உள்ளாட்சி தேர்தலில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதபட்சத்தில், 11 அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை காட்டி, வாக்காளர் ஓட்டுப்போடலாம் என, ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆதார் கார்டு; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணி அட்டை; புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்கு புத்தகம்; தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தில் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு; ஓட்டுனர் உரிமம்; பான் கார்டு; தேசிய மக்கள் பதிவேட்டில் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு; பாஸ்போர்ட்; புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்; மத்திய - மாநில பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை; எம்.பி., - எம்.எல்.ஏ.,வுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டையில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும். அதை பயன்படுத்தி ஓட்டுப்போட்டு, ஜனநாயக கடமையை நிறைவேற்றலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X