பொது செய்தி

தமிழ்நாடு

94 நிறுவனம் மீது வழக்கு

Added : அக் 04, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் தொழிலாளர் உதவி கமிஷனர் முத்து வெளியிட்டுள்ள அறிக்கை: அக்., 2ல் காந்தி ஜெயந்தி அன்று, கடைகள், நிறுவனங்கள், உணவு, மோட்டார் போக்குவரத்து நிறுவன தொழிலாளர்களுக்கு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். இல்லையெனில், முன் அனுமதியுடன் பணி அமர்த்தி, இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அளிக்க வேண்டும். அதற்கான படிவங்களை, 24 மணி நேரத்துக்கு முன்

சேலம்: சேலம் தொழிலாளர் உதவி கமிஷனர் முத்து வெளியிட்டுள்ள அறிக்கை: அக்., 2ல் காந்தி ஜெயந்தி அன்று, கடைகள், நிறுவனங்கள், உணவு, மோட்டார் போக்குவரத்து நிறுவன தொழிலாளர்களுக்கு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். இல்லையெனில், முன் அனுமதியுடன் பணி அமர்த்தி, இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அளிக்க வேண்டும். அதற்கான படிவங்களை, 24 மணி நேரத்துக்கு முன் அனுப்பியிருக்க வேண்டும். இத்தகைய சட்ட விதிமுறை பின்பற்றப்படுகிறதா என்பதை கண்டறிய, சேலம் மாவட்டத்தில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, விதிமீறிய, 39 கடைகள், 45 உணவு நிறுவனம், 10 மோட்டார் போக்குவரத்து நிறுவனம் என, 94 நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X