வெறும் 10 கி.மீ., சாலை; பள்ளங்களுக்கு கணக்கில்லை

Added : அக் 04, 2021
Share
Advertisement
ஓமலூர்: தாரமங்கலத்தில் இருந்து, ஓமலூர் செல்லும், வெறும், 10 கி.மீ., மாநில நெடுஞ்சாலையில், 50க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளங்கள் உருவாகியுள்ளதால், விபத்துகள் தொடர்கின்றன.கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, சேலம் மாவட்டம், ஓமலூர் வழியாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு பகுதிகளுக்கு தினமும், பஸ்கள், சரக்கு லாரிகள், கன்டெய்னர் என, ஆயிரக்கணக்கான வாகனங்கள்

ஓமலூர்: தாரமங்கலத்தில் இருந்து, ஓமலூர் செல்லும், வெறும், 10 கி.மீ., மாநில நெடுஞ்சாலையில், 50க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளங்கள் உருவாகியுள்ளதால், விபத்துகள் தொடர்கின்றன.


கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, சேலம் மாவட்டம், ஓமலூர் வழியாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு பகுதிகளுக்கு தினமும், பஸ்கள், சரக்கு லாரிகள், கன்டெய்னர் என, ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இருவழிச்சாலையாக உள்ள அச்சாலையை, சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தில், நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. ஆனால், தாரமங்கலத்தில் இருந்து, ஓமலூர் வரை உள்ள, 10 கி.மீ., சாலையில், பல இடங்களில் மேடு, பள்ளங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக, வேலக்கவுண்டனூர், எம்.செட்டிப்பட்டி பஸ் ஸ்டாப், சிக்கம்பட்டி என தாரமங்கலம் பைபாஸ் வரை, 50க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், இரவில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி காயம் அடைவது தொடர்கிறது. குறிப்பாக, பள்ளத்தால் ஒதுங்க முயற்சிக்கும் போது, மற்ற வாகனங்கள் மீது மோதுவதால், விபத்தை தவிர்க்க முடியாத நிலை காணப்படுகிறது. அதனால், உயிரிழப்புகளை தவிர்க்க, உடனே பள்ளங்களை சீரமைக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட திட்ட, சங்ககிரி பிரிவு உதவி இயக்குனர் தாரகேசுவரன் கூறுகையில், ''ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. விரைவில், பள்ளங்கள் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X